சரவணா ஸ்டோர் உரிமையாளரான அருள் சரணவன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் வெளியானி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
தனது நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தனது நிறுவத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
கடந்த 1997-ம் ஆண்டு அஜித் விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமான ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஊர்வசி ருத்வாலா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, விஜயகுமார், சுமன், நாசர், லிவிங்ஸ்டன், யோகிபாபு, விவோக், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
Advertisment
Advertisements
பூஜா ஹெக்டே, தமன்னா,.ராய் லட்சுமி, ஷர்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து படததின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் விஞ்ஞானியாக வரும் அருள் சரவணன் கிராமத்திற்கு வரும்போது அங்கு இருக்கும் பணக்காரர்களால் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி எதிர்கோண்டார் என்பதே கதை என்று டிரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது
கூடவே பாடல்கள் அதிரடி ஆக்ஷன் காமெடி என ஒரு ஆக்ஷன் படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளது. இதில் பல காட்சிகள் சிவாஜி படத்தில் வரும் ரஜினியை நினைவுபடுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil