மாத செலவுக்கு இத்தனை லட்சம் வேணும்; ரங்கராஜ்க்கு செக் வைத்த கிரிசில்டா: மனு மீது விரைவில் விசாரணை!

நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜ்க்கு உத்தரவிடக் கோரி கிரிசில்டா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜ்க்கு உத்தரவிடக் கோரி கிரிசில்டா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Madhampatty Joy

மாதம்பட்டி ரங்கராஜ், தனக்கு ஜீவனாம்சமாக மாதம் 6.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், தனது காஸ்டியூம் டிசைனராக ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் வெளியானது, இது குறித்து இவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜூவுடன் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன்பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையின் பெயர் ராஹா ரங்கராஜ் என்றும் கூறிய நிலையில், திருமண புகைப்படம் வெளியிட்ட சில வாரங்களில் ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுக்கிறார் என்றும், தன்னைபோல் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்றும் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். அன்றுமுதல் இந்த விவகாரம் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆனால் அதற்கு ரங்கராஜஜ் தான் பொறுப்பு என்றும் கூறியிருந்தார். 

காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமீபத்தில் கிரிசில்டா தனது வழக்கறிஞருடன், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜ்க்கு உத்தரவிடக் கோரி கிரிசில்டா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்த மனுவில், தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை, 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: