10 நாள் கால்ஷீட், மொத்த படமும் ரெடி; முதல்வர் கனவை நிறைவேற்றிய படம்: தியேட்டரில் கண்ணீர் விட்ட எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்று குப்பத்திற்கு வரும்போது வாங்கையாக வாத்தியாரையா என்ற பாடல் வருகிறது. மக்கள் அனைவரும் விசில் அடித்து கொண்டாடுகின்றனர். மேலும் வாலி எழுதிய பாடல் முடிந்தவுடன் இந்த பாடலை மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்கின்றனர்.

எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்று குப்பத்திற்கு வரும்போது வாங்கையாக வாத்தியாரையா என்ற பாடல் வருகிறது. மக்கள் அனைவரும் விசில் அடித்து கொண்டாடுகின்றனர். மேலும் வாலி எழுதிய பாடல் முடிந்தவுடன் இந்த பாடலை மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்கின்றனர்.

author-image
D. Elayaraja
New Update
MGR ADMkj

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்த எம்.ஜி.ஆர், இன்றும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், தனக்கு முதல் ஆசை வந்தபோது மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்களா என்ற சந்தேகத்தை நிர்வர்த்தி செய்துகொள்ளவே ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார், திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா இறந்தவுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 1972-ம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 1967-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தபோது முதல்வராக இருந்தவர் அறிஞர் அண்ணா. ஆனால், 1969-ம் ஆண்டு அவர் உயிரிழந்த நிலையில், அடுத்த முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார்.  இதனிடையே அண்ணா இறந்தவுடன், முதல்வராக வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர், மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்களா என்ற சந்தேகத்துடன் இருந்துள்ளார். அப்போது இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக, சினிமா தயாரிப்பாளர் நாகி ரெட்டியாரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது நீங்கள் என்னை வைத்து படம் எடுக்க வேண்டும். இந்த படத்தில் நான் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது போலவும் தோல்வி சந்திப்பது போலவும், காட்சிகள் இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நாகி ரெட்டியார் உங்களை வைத்து படம் எடுப்பது என் பாக்கியம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு 10 நாட்களில் அந்த படம் எடுத்து முடிக்கப்படுகிறது. படம் ரிலீஸ் ஆன முதல் நாள் நாகி ரெட்டியாருக்கு போன் செய்த எம்.ஜி.ஆர் நான் இன்றே படத்தை ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

எம்.ஜி.ஆர் பேச்சால் அதிர்ச்சியான அவர், எப்படி முடியும் என்று கேட்க நான் மக்களோடு மக்களாக படத்தை பார்க்க வேண்டும். நீங்களும் நானும் மட்டும் போகலாம் என்று கூறியுள்ளார். அதன்படி இவர்கள், படத்தை பார்க்க சென்றபோது, எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்று குப்பத்திற்கு வரும்போது வாங்கையாக வாத்தியாரையா என்ற பாடல் வருகிறது. மக்கள் அனைவரும் விசில் அடித்து கொண்டாடுகின்றனர். மேலும் வாலி எழுதிய பாடல் முடிந்தவுடன் இந்த பாடலை மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்கின்றனர்.

அதன்படி 2-வது முறை இந்த பாடல் வரும்போது, நாகி ரெட்டியார் எம்.ஜி.ஆரை பார்க்கிறார். இதை எம்.ஜி.ஆர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அன்றே முடிவு செய்த செய்த எம்.ஜி.ஆர், நாம் தேர்தலில் நின்றால் ஜெயித்துவிடலாம் என்று நினைத்துள்ளார். இந்த தகவலை என் தந்தையின் சில நினைவுகள் என்ற புத்தகத்தில் நாகி ரெட்டியார் மகன் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: