Advertisment

மீண்டும் ரஜினி - வடிவேலு கூட்டணி... மம்முட்டியுடன் நடிக்கும் விஜய்சேதுபதி... டாப் 5 சினிமா செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 03, 2022 16:21 IST
மீண்டும் ரஜினி - வடிவேலு கூட்டணி... மம்முட்டியுடன் நடிக்கும் விஜய்சேதுபதி... டாப் 5 சினிமா செய்திகள்

14 வருடங்களுக்கு பிறகு ரஜினி – வடிவேலு கூட்டணி?

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஜெயிலர் படத்தை தொடர்ந்த ரஜினிகாந்த் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தின் முதல் பாடலின் ப்ரமோ வெளியீடு

விஜய் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார் யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாடலின் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் த்ரிஷாவின் 3 படங்கள்

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா நடிப்பில்,  கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ரங்கி ஆகிய படங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த படங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், த்ரிஷாவின் சோலோ நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றியை பெறாததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது.  இதனிடையே பொன்னியின் செல்வன் வெற்றி காரணமாக தற்போது இந்த 3 படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதி ரீமேக்கில் இணைந்த நடிகை

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் கைதி. போதை பொருள் மாஃபியா கும்பலை பற்றிய கதையில் ஒரு அப்பா மகள் செண்டிமெண்ட் கொண்ட இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தை இந்தியில் போலோ என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக அஜய்தேவ்கன் நடிக்க உள்ள நிலையில், படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிக அமலா பால் நடிக்க உள்ளார். அஜய் தேவ்கனே இயக்கி நடிக்கும் இந்தபடத்தில் தபு நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகருடன் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் கதை சரியாக இருந்தால் ஹீரோ வில்லன் என அனைத்து கேரக்டரிலும் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினியுடனும், விக்ரம் படத்தில் கமல்ஹாசன், மாஸ்டர் படத்தில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி தற்போது மணிகண்டன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Tamil Cinema #Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment