scorecardresearch

‘வலிமை’ புயல் இன்னும் சில நாட்களில்… வைரலாகும் அஜித்தின் புதிய வீடியோ!

Actor Ajith Kumar’s ‘Valimai’ movie is releasing on February 24th worldwide Tamil News: நடிகர் அஜீத் குமாரின் ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் சுவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tamil cinema news: Fans reactions on Boney Kapoor’s recent 'Valimai’ movie video

 Ajithkumar’s ‘Valimai Tamil News: நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தில் நடிகர் அஜித்-துடன் பிரபல இந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையமைத்துள்ளார்.

நடிகர் அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் உருவாகி வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா 3ஆம் அலை காரணமாக படத்திற்கான ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் ‘வலிமை’ ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது புதிய வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “Experience the power of Valimai! In cinemas only. Releasing on 24th February in Tamil ,Telugu, Hindi and Kannada.” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை பகிர்ந்து வரும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் சுவையான கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர், ‘வலிமை புயல் இன்னும் 10 நாட்களில்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகரோ, இன்னும் ப்ரோமோக்களை ரிலீஸ் செய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

வேறு ஒரு ரசிகரோ, “கோலிவுட்டின் மிகப்பெரிய திருவிழாவுக்குத் தயார்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news fans reactions on boney kapoors recent valimai movie video