scorecardresearch

ரிலீசுக்கு ரெடியான வலிமை… உலகின் மிகப்பெரிய தியேட்டரில் முதல் ஷோ பார்க்கும் ஜான்வி கபூர்!

Bollywood actress Janhvi Kapoor will be watching Ajith’s ‘Valimai’ at the Le Grand Rex theatre in Paris Tamil News: நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை பிரான்சில் வெளியிடும் தேதியில் பார்க்கப்போவதாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tamil cinema news: Janhvi Kapoor to watch Ajith’s Valimai in Paris

Actor Ajith’s Valimai movie Tamil News: நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தில் நடிகர் அஜித்-துடன் பிரபல இந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையமைத்துள்ளார்.

‘வலிமை’

வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிருந்த நிலையில், படத்திற்காக சினிமா ரசிகர்கள், நடிகர் அஜித்தின் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏனென்றால், நடிகர் அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் உருவாகி வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தவிர, கொரோனா 3ஆம் அலை காரணமாக படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால், தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ‘எல்லை இல்லை’ என்று கூறும் அளவிற்கு உள்ளது.

‘வலிமை’

இந்நிலையில், நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை பிரான்சில் வெளியிடும் தேதியில் பார்க்கப்போவதாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர், உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பாரிஸ் ‘லீ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் அவர் வலிமை திரைப்படத்தைப் படத்தை காண இருப்பதாகவும், விரைவில் பிரான்சில் உள்ள அஜித் ரசிகர்களை தான் சந்திப்பேன் என்றும் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

வலிமை திரைப்படத்திற்கு தணிக்கை குழுவால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் 178 நிமிடங்கள் (2 மணி 58 நிமிடங்கள்) ஓடும் என்றும் கூறப்படுகிறது.

ஜான்வி கபூர்

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடிகை ஜான்வி கபூரும் ஒரு ரோலில் நடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema news janhvi kapoor to watch ajiths valimai in paris