/indian-express-tamil/media/media_files/2025/10/06/actress-juhi-chawala-2025-10-06-18-30-52.jpg)
ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாவும், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நெருங்கிய தோழி, பிசினஸ் பார்ட்னர் என இந்தியாவின் மிகவும் பணக்கார சினிமா பிரபலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ஜூஹி சாவ்லா.
இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இந்த பட்டியலில் ரூ. 12,490 கோடி சொத்து மதிப்புடன் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். ஹிருத்திக் ரோஷன் (ரூ. 2,160 கோடி), கரண் ஜோஹர் (ரூ. 1,880 கோடி), அமிதாப் பச்சன் (ரூ. 1,630 கோடி) போன்றோரை பின்னுக்குத்தள்ளி ஜூஹி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து ரூ. 7,790 கோடி, இதன் மூலம் இந்தியாவின் மிகவும் பணக்கார நடிகை என்ற பெருமையையும் ஜூஹி சாவ்லா தனதாக்கிக் கொண்டார்.
மலையாள சினிமாவில் நன்கு அறியப்பட்டவர் ஜூஹி சாவ்லா என்றாலும் அவர் தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இயக்கி நடித்த பருவ ராகம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம், தமிழ் என இரு மொழிகளிலும் வெளியானது. அதேபோல், மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவருக்கும் ஜோடியாகவும் நடித்துள்ளார். ஃபாசில் இயக்கிய 'ஹரிகிருஷ்ணன்ஸ்' திரைப்படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவருக்கும் ஜூஹி, நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு கலாபவன் மணி நடித்த ஜேம்ஸ்பாண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். 1980கள் மற்றும் 1990களில் பாலிவுட்டின் மிகவும் சுறுசுறுப்பான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த ஜூஹி, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும், பிசினஸில் சிறப்பான செயல்பாடுகளின் மூலம்தான் ஜூஹி புதிய சாதனையை எட்டியுள்ளார். ஒரே ஆண்டில் மட்டும், அவரது சொத்து மதிப்பில் ரூ. 3,190 கோடி உயர்வு பதிவாகியுள்ளது.
ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025ன் படி, ஜூஹி சாவ்லா மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 69% உயர்ந்துள்ளது. 2024ல் ரூ. 4,600 கோடியாக இருந்த இது, ஒரே ஆண்டில் ரூ. 3,190 கோடி அதிகரித்து, தற்போது ரூ. 7,790 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியானது எம்.3எம்.(M3M) ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025ன் முன்னணிப் பெண்கள் பட்டியலில் அவருக்கு 6-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
கணவர் ஜெய் மேத்தா மற்றும் இணை நடிகர் ஷாருக்கான் ஆகியோருடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் இணை உரிமையாளராகவும் ஜூஹி உள்ளார். 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிராண்ட் மதிப்பு கணிசமாக அதிகரித்தது. ஹூலிஹான் லோக்கியின் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு மதிப்பீட்டு ஆய்வின்படி (ஜூன் 2024), கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தற்போதைய மதிப்பு ரூ. 1,915 கோடி ஆகும்.
மிஸ் இந்தியா போட்டியே ஜூஹியின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதில் வெற்றியாளரான பிறகு, மாடலிங் மற்றும் நடிப்பு உலகத்திற்கான கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. 'ஹம் ஹே ரஹி பியார் கே', 'கயாமத் சே கயாமத் தக்', 'யெஸ் பாஸ்', 'டர்', 'போல் ராதா போல்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ஜூஹி புகழின் உச்சிக்குச் சென்றார். ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பில் ஒரு பகுதி சினிமாவிலிருந்து வந்தாலும், பெரும்பாலானவை அவரது பல்வேறு பிசினஸ் முயற்சிகளிலிருந்தே வருகிறது.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் குழுமத்தின் இணை நிறுவனர்களிலும் ஜூஹியும் ஒருவர். மேலும், கணவர் ஜெய் மேத்தாவுக்குச் சொந்தமான மேத்தா குழுமத்தின் கீழ் உள்ள சௌராஷ்டிரா சிமென்ட் லிமிடெட்டின் பங்குதாரராகவும் ஜூஹி உள்ளார். மும்பையின் மிகவும் ஆடம்பரமான பகுதியான மலபார் ஹில்லில் அமைந்துள்ள மேத்தா குடும்பத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்தான் தம்பதியர் வசித்து வருகின்றனர். மிட்-டே அறிக்கையின்படி, கட்டிடத்தின் இரண்டு தளங்கள் ஜூஹி மற்றும் அவரது குடும்பத்திற்கானது.
மேலும் இரண்டு தளங்கள் மேத்தாவின் கலைப் பொருட்களைச் சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
10-வது தளத்தில், மெரைன் டிரைவை எதிர்கொள்ளும் ஒரு பிரமாண்டமான மொட்டை மாடியும் ஜூஹி மற்றும் மேத்தாவுக்குச் சொந்தமானது. ஜூஹி மற்றும் ஜெய் மேத்தாவுக்கு மும்பையில் இத்தாலிய பாணியில் அமைந்த குஸ்டோஸோ மற்றும் சிக் லெபனீஸ் உணவகமான ரூ டு லிபன் என இரண்டு உணவகங்களும் உள்ளன. ஆர்க்கிடெக்சுரல் டைஜஸ்டின் அறிக்கையின்படி, போர்பந்தரில் உள்ள ஹில் பங்களாவில் இவர்களுக்கு மற்றொரு ஆடம்பர வீடும் உள்ளது. இந்த ஆடம்பர வீட்டை சனா தாஸ்வாட் என்பவர் புதுப்பித்து வடிவமைத்துள்ளார்.
ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ள ஜூஹி, ரூ. 3.3 கோடி மதிப்பிலான ஆஸ்டன் மார்ட்டின் ராபிட், ரூ. 1.8 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ 7, ரூ. 1.7 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ரூ. 1.2 கோடி மதிப்பிலான ஜாகுவார் எக்ஸ்ஜே, ரூ. 2 கோடி மதிப்பிலான போர்ஷே கெய்ன் போன்ற பல சொகுசு கார்களும் தம்பதியரின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ளன. மேகி, பெப்சி, குர்குரே, ரூஹ் அஃப்சா, கெல்லாக்ஸ் சாகோஸ், கேஷ்கிங் ஆயுர்வேதிக் ஆயில், காய் பனஸ்பதி, அசோகா ஊறுகாய், இமாமி போரோபிளஸ் போன்ற பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாஸடராகவும் ஜூஹி இருந்துள்ளார். ஜலக் திக்லா ஜா போன்ற ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் ஜூஹி சாவ்லா ஜொலித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.