Advertisment

காஞ்ஜூரிங் ரீமேக் ஷூட்டிங்கா? கமல்ஹாசனின் ரீல் மகள் வைரல் க்ளிக்ஸ்

எஸ்தர் அனில், 2013-ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Esthar

பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில்

கமல் கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அனில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் அனில். 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

publive-image

அதனைத் தொடர்ந்து அதே 2010-ம் ஆண்டில் ஒருநாள் வரும், சகுடுபம் ஷியமலா, காக்டைல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

publive-image

அடுத்தடுத்த வருடங்களில் பல படங்களில் நடித்திருந்த எஸ்தர் அனில், 2013-ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

மோகன்லால் – மீனா இணைந்து நடித்திருந்த இந்த படததில் மோகன்லாலின் இளையமகளாக நடித்த எஸ்தரின் நடிப்பு பலரின் பாராட்டு பாராட்டுக்களை பெற்றது.

publive-image

அதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடித்த தெலுங்கு த்ரிஷ்யம், தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் (த்ரிஷயம் ரீமேக்) ஆகிய படங்களிலும் எஸ்தர் நடித்திருந்தார்.

publive-image

அதேபோல் மலையாளத்தில் 2021-ம் ஆண்டு வெளியான த்ரிஷயம் 2, தெலுங்கு த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த எஸ்தர், பாபநாசம் படதிற்கு பிறகு தமிழில் வி3 என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் எஸ்தர் அனில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் பல பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

அந்த வகையில் தற்போது எஸ்தர் வெள்ளை நிற உடையில் தேவதை போல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பாபநாசம் படத்தில் பார்த்த கமல் மகளாக இவர் என்று ஆச்சரியடைந்து வருகின்றனர். மேலும் இந்த படங்கள் தற்போது லைக்ஸை குவித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment