25 வருஷம் ஆனாலும், அந்த பயம் மட்டும் குறையலயே; இந்த வில்லன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் தான் பொட்டு அம்மன். ரோஜா நாயகியாக நடித்த இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் வேணு, கே.ஆர்.விஜயா, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் தான் பொட்டு அம்மன். ரோஜா நாயகியாக நடித்த இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் வேணு, கே.ஆர்.விஜயா, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

author-image
D. Elayaraja
New Update
Pottu amman Villan

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான பொட்டு அம்மன் படத்தில், வில்லனாக மிரட்டிய நடிகர் யார் என்பது பலரின் கேள்வியாக இருக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அந்த நடிகர் முக்கிய கேரக்டரில் நடித்த முதல் படமே இந்த படம் தான். அவர் யார் என்பதை பார்ப்போமா?

Advertisment

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் தான் பொட்டு அம்மன். ரோஜா நாயகியாக நடித்த இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் வேணு, கே.ஆர்.விஜயா, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருவான இந்த படத்தை தமிழில், ராஜரத்தினம் என்பவரும், தெலுங்கில் ஆர்,கே.செல்வமணியும் இயக்கினர். ரோஜா இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் வெளியானபோது அனைவரும் பார்த்து பயந்த கேரக்டர் என்றால் அந்த வில்லன் கேரக்டர் தான்.

படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த வில்லன் கேரக்டரில் மீது உள்ள பயம் இன்னும் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டிய அந்த நடிகர் முக்கிய கேரக்டரில் நடித்த முதல் படம் இதுதான். அதற்கு முன்பு ஓரிரு படங்களில் அவர் நடித்திருந்தாலும், அந்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர் இல்லை. இந்த நடிகர் வேறு யாரும் இல்லை. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கிருஷ்ணனா தான். 1993-ம் ஆண்டு சமயம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Advertisment
Advertisements

அதன்பிறகு 3 வருட இடைவெளியில் 1996-ம் ஆண்டு, யுவதுர்கி என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 4 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த படம் தான் பொட்டு அம்மன். அதன்பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்த சுரேஷ் கிருஷ்ணா, தமிழில் மது மோகன்ஸ் சீரியல், திருவள்ளுவர் என இரு சீரியல்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சுரேஷ் கிருஷ்ணனா, இந்த ஆண்டு, வெளியான மரணமாஸ், பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actor suresh Krishna

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் பொட்டு அம்மன் படத்தில் அவர் நடித்த, ப்ரத்மிபதி என்ற கேரக்டர் இன்றும் பலருக்கும் பயத்தை கொடுக்கும் ஒரு கேரக்டராக நிலைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சுரேஷ் கிருஷ்ணாவின் நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: