Advertisment

ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்... ரஜினிக்கு சொகுசு கார் பரிசளித்த கலாநிதி மாறன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth

ரஜினிகாந்த் - கலாநிதிமாறன்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வசூலில் பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தாயரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிக்கு புதிய பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.  

Advertisment

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திரந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. படத்தின் வெளியீட்க்கு முன்பெ இமயமலை பயணம் சென்ற ரஜினிகாந்த் தற்போது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய நிலையில்,படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார்.

இதனிடையே விக்ரம் படம் கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கார் கொடுத்தது போல் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனுக்கு கார் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெய்லரின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினிக்கு பி.எம்.டபுள்யூ எக்ஸ் 7 சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்த்தில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனை டீலில் விட்டீர்களா? என்று கேட்டு வருகின்றனர். அதே சமயம் விரைவில் இயக்குனர் நெல்சனுக்கும் கலாநிதி மாறன் ஒரு பெரிய பரிசை வழங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment