Advertisment

ஹாலிவுட்டை கதற விடும் கமல்ஹாசன்... ''ப்ராஜெக்ட் கே'' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதுதானா?

ப்ராஜெக்ட் கே படத்தின் ஹீரோ பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் கமல்ஹாசன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Project K Kamal Haasan2

ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் ஃபர்ஸ்ட் லுக் இதுதானா?

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளம்பஸ் நாளை (ஜூலை 21) வெளியாக உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

Advertisment

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான 3 படங்களுமே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ள நிலையில், பிரபாஸ் ஒரு பெரிய வெற்றியை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் அவர் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வரும் நிலையில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ராணா முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். முலம் இந்த படத்தில் பிரபாஸ் ஹிரோவாக நடிக்க வில்லனாக கமல்ஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக வெளியாகும் பிராஜெக்ட் கே திரைப்படத்திற் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூப்பர் ஹீரோ ஜானரில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பாலானா படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், பிரபல ஹாலிவுட் சிஜி நிறுவனமே இந்த படத்திற்காக கிராபிக்ஸ் வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை (ஜூலை 21) வெளியாகிறது.

Project K Kamal Haasan

ப்ராஜெக்ட் கே படத்தின் கமல்ஹாசன் ஃபர்ஸட் லுக் ரசிகர்கள் உருவாக்கியது

படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட உள்ள இந்த க்ளிம்ப்ஸ், அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக ப்ராஜெக்ட் கே திரைப்படத்திலல் இருந்து பிரபாஸின் ஃப்ர்ஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டரில் சூப்பர் ஹீரோ லுக்கில் மாஸ் காட்டினாலும், இந்த போஸ்டர் சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன், அமிதாப், தீபிகா படுகோன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனின் வித்தியாசமான போஸ்டர் ஒன்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடித்து வருகிறார் என்பதால், இந்த போஸ்டரும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளர். ரசிகர்களால் வெளியிடப்பட்ட இந்த ஃபேன் மேட் போஸ்டர், ஒரிஜினலுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருமத் நிலையில், ரியல் ப்ராஜெக்ட் கே படத்தின் கமல்ஹாசன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment