Advertisment

பேச்சு இல்ல இனி வீச்சுதான்... அனல் பறக்கும் ஜெயிலர் ஷோகேஸ் : மோகன்லால், சிவராஜ் மிஸ்ஸிங்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A chance to act with superstar Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷோகேஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், சுனில், ஜாக்கி ஷெரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்துளள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது. தற்பேவாது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.

இதனிடையே ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தில் வருவது போன்று ஷோகேஸின் தொடக்கத்தில் ராக்கெட் லாஞ்சர் வைத்து வெடிக்க வைக்கும் கட்சியுடன் தொடங்கும் இந்த டிரெய்லரின் விடிவி கணேஷ் ரஜினி குறித்து பில்டப் கொடுக்கிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பூனை மாதிரி இருப்பார்கள் என்று சொல்லும்போது ரஜினிகாந்த் காய்கறி கூடையுடன் வருகிறார்.

அடுத்து ஒரு கட்டத்தில் அவர்களே புலியாக மாறுவார்கள் என்று சொல்லும்போது ரஜினிகாந்த் ஆக்ஷனில் அதகளம் செய்கிறார். நெல்சனின் டாக்டர் மற்றும் பீஸ்ட் படம் போன்று இந்த படத்திலும் டார்க் காமெடி அதிகம் இருக்கும் என்பது இந்த ஷோகேஸ் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ள ரஜினிகாந்த் இனி பேச்சு இல்ல வீச்சு தான் என்று பல பஞ்ச் வசனங்களை பேசுகிறார்.

2.15 நிமிடங்கள் கொண்ட இந்த ஷோகேஸில் படத்தின் முக்கிய கேரக்டர்களாக ரஜினிகாந்த், ஜாக்கி ஷெரப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் காட்டப்பட்டுள்ள நிலையில், மோகன்லால், சிவராஜ்குமார், மற்றும் தமன்னா ஆகியோர் டிரெய்லரில் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு நாளை நோக்கி காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment