Advertisment

லோகேஷ் கனகராஜ் புது ரோல்... ரஜினி பட இயக்குனர் மாற்றம்? டாப் 5 சினிமா

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
லோகேஷ் கனகராஜ் புது ரோல்... ரஜினி பட இயக்குனர் மாற்றம்? டாப் 5 சினிமா

ரஜினி படத்தின் இயக்குனர் மாற்றமா?

Advertisment

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து இரு படங்களை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடிக்கிறார். மற்றொன்று டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் படத்தின் இயக்குனரை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகைக்கு ப்ரபோசல் அனுப்பிய 7-ம் வகுப்பு மாணவன்

2008-ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதனைத் தொடர்ந்து தெனாவட்டு,  கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் குப்பத்துராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 7-ம் வகுப்பு மாணவன் தனக்கு திருமண ப்ரபோசல் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு 21 வயது வரும் வரை காந்திருங்கள். வயது பிரச்சினை இல்லை. இப்போ இது ட்ரெண்டாகிவிட்டது என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடலில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி – ஸ்ருதிஹாசன் பதில்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்தில் அவரிடம் ஒரு ரசிகர் எத்தனை பிளாஸ்டிக்’ சர்ஜரி செய்தீர்கள் என்று கேட்டார். இதற்கு கோபமாக பேசிய ஸ்ருதிஹாசன், பிறகு மூக்கில் மட்டும் சர்ஜரி செய்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தயாரிப்பாராகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்க உள்ளார். கடந்த டிசம்பர் 5-ந் தேதி இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது நெருங்கிய நண்பரான ரத்னகுமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் படத்தை தயாரிப்பதாகவும், அடுத்து விக்ரமின் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்பாவாக போகும் நடிகர் ராம்சரன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ராம்சரன் உபசேனா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment