Advertisment

ஆளவந்தான் vs முத்து: ரீ ரிலீஸ் வெற்றி யாருக்கு?

ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான முத்து, கமல்ஹாசன் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் ஆகிய திரைப்படங்கள் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

author-image
D. Elayaraja
New Update
Muthu vs Aalavanthan

ஆளவந்தான் - முத்து

தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தற்போது பிஸியான நடிகர்களாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் ஆகிய படங்கள் ரீ-ரிலீ்ஸ் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சினிமாத்துறை டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பிறகு பழைய படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், ரஜினிகாந்த் நடித்த பாபா உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இதில் சமீபத்தில் சசிகுமார் ஜெய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுப்பிரமணியபுரம் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

முத்து - ரஜினிகாந்த்

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான முத்து, மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தென்மாவின் கொம்பேத் படத்தின் ரீமேக் என்றாலும் அந்த படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதையில் வெளியான படம் தான் முத்து.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் ரஜனிகாந்த் மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில் வடிவேலு, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ர    ஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியா மட்டுமல்லாமல் கடல் கடந்து ஜப்பானிலும் முத்து படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ஆளவந்தான் - கமல்ஹாசன்

கடந்த 2001-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் தான் ஆளவந்தான். கமல்ஹாசனின் தாயம் என்ற கதையின் அடிப்படையில் வெளியான இந்த படத்தில் ரவீனா டன்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனு ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் 2 வேடங்களில் வழக்கமான நடிப்பில் அசத்தியிருப்பார்.

அதேபோல் வில்லன் கமல் உடல் கட்டை ஏற்றியும், ஹீரோ கமல் சாதாரண உடலமைப்பிலும் வித்தியாசம் காட்டியிருப்பார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் அப்போது வரவேற்பை பெறவில்லை என்றாலும், கமல்ஹாசனின் மற்ற படங்களை போல் அடுத்த சில வருடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் படமாக மாறியது.

முத்து vs ஆளவந்தான்

இந்த இரு படங்களும் 6 வருட இடைவெளியில் வெளியானாலும், தற்போது டிசம்பர் 9 (இன்று) ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முத்து படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனமும், ஆளவந்தான் படத்தை தயாரித்த வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் தங்களது படங்களின் ரீ-ரிலீஸ்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 90-ஸ் ரசிகர்கள் காலக்கட்டத்தில் வெளியான இந்த படத்திற்கு 2கே கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், முத்து, ஆளவந்தான் என இரு படங்களுமே இன்றைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக 2கே கிட்ஸ் ரசிகர்கள் இரு படங்களையுமே கொண்டாடி வருவதாக சமூகவலைதளங்களில் தங்கள் வெளியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment