Advertisment

ரஜினி vs விஜய்... 2023-ல் யார் நம்பர் ஒன்னாக இருப்பார்? ரோகினி தியேட்டர் உரிமையாளர் பதில்

இனி வரும் நாட்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய படம் வெளியாக உள்ளது. அனைத்து படங்களும் ஹிட்டடிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Vijay

Rajinikanth Vijay

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது தொடர்பான விவாதம் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், 2023-ல் யார் நம்பர் 1-ஆக இருப்பார் என்பது குறித்து ரோகினி திரையரங்கின் உரிமையாளர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. குறிப்பாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் பெரும் புயலை கிளப்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பக்கம் சில நடிகர்கள் பலரும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்ல, மற்றொரு பக்கம் இன்னும் சிலர் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து ரஜினியோ விஜயோ இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா மற்றும் கழுகு கதையை ரஜினிகாந்த் கூறியது விஜய்க்கு வெளிப்படையாக சவால் விடுகிறார் என்று இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரோகினி திரையரங்க உரிமையாளர் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் 2023-ம் ஆண்டு யார் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ் சினிமாவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் நம்பர் ஒன் இருக்கலாம். எனது தனிப்பட்ட விருப்பம் தளபதி. ஆனால் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

publive-image

இதுவரைக்கும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது வாரிசு படம் தான். இன்னும் 5 மாதங்களில் தெரிந்துவிடும். இதில் ஜெயிலர் – லியோ இடையே கடும் போட்டி இருக்கும். அதே மாதிரி விஜயின் பீஸ்ட் திரைப்படம் நன்றாகவே போனது. வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றிப்படம் தான். ஆனாலும் இப்போது ஜெயிலர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரெய்லர் வெளியான பிறகு இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இனி வரும் நாட்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய படம் வெளியாக உள்ளது. அனைத்து படங்களும் ஹிட்டடிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இந்த மாதம் ஜெயிலர், அடுத்த மாதம் ஜவான், அதற்கு அடுத்து அக்டோபரில் லியோ, அதன்பிறகு கேப்டன் மில்லர் என வரிசையாக படங்கள் இருக்கிறது. ஒரு ஃபேன் பாயாக லியோ ஹிட் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் விஜய் அவரது வழியில் சென்றுகொண்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சமூகபணிகளையும் செய்து வருகிறார். அதனால் அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்று. விஜய் அடுத்தடுத்து உயர்ந்து அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று அவரது ரசிகராக நாங்கள் விரும்புகிறோம். இதுவும் இல்லாமல் ரஜினி விஜய் இடையே சுமூகமான உறவு இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் தான் இந்த மாதிரியான சூப்பர் ஸ்டார் சர்ச்சை உருவாக்குகிறார்கள் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment