/indian-express-tamil/media/media_files/2025/10/10/vadivelu-h-2025-10-10-17-31-47.jpg)
சினிமாதுறையை பொறுத்தவரை, ஹீரோ, ஹீரோயின்கள் அதிகமாக சம்பளம் வாங்குவார்கள். அதே சமயம் மற்ற நடிகர் நடிகைகள், துணை நடிகர்கள் என பலரும் அவர்களை விட குறைவாகத்தான் சம்பளம் பெறுவார்கள். இந்த வரிசையில், காமெடி நடிகர்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்த காலக்கட்டங்களும் உண்டு.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி தற்போது உள்ள யோகி பாபுவரை பல காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள். கே.ஏ.தங்கவேலு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி என பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டமணி செந்தில் காமினேஷன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாதது. தற்போது சந்தானம் சூரி இருவரும் ஹீரோவாகிவிட்டனர். வடிவேலு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
யோகி பாபு ஹீரோ காமெடியன் என இரு பக்கமும் நடித்து வருகிறார். இது தமிழ் சினிமாவின் நிலை என்றாலும், மற்ற மொழிகளிலும் காமெடி நடிகர்கள் ஹீரோவாவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி காமெடியில் கலக்கிய அனைத்து நடிகர்களும் டாப் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த பட்டியலில் ஒருசில நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?
தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் வெளியான மொழி படத்தில் இவரின் காமெடி அசத்தலாக இருக்கும். மேலும் இந்திய சினிாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் பிரம்மானந்தம், ஆனால் இந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நகைச்சுவை நடிகர்தான் இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தான். சுமார் 1000 படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மட்டும் இல்லாமல், பிற தொழில்களில் வருமானம் ஈட்டிவரும் இவரின் சொத்து மதிப்பு, சுமார் 500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காமெடி நடிகர்களில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளவர் பிரம்மானந்தம் தான்.அடுத்து இந்த பட்டியலில் பாலிவுட் சினிமாவில் முன்னணி காமெடியானான கபில்சர்மா, சுமார் 300 கோடி சொத்து மதிப்புடன், 2-வது இடத்திலும், ஜானி லீவர் சுமார் 280 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-வது இடத்திலும் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு சுமார் 100 கோடி சொத்து மதிப்புடன் முதலித்திலும், அவருக்கு அடுத்து சந்தானம், யோகி பாபு, கவுண்டமணி ஆகியோர் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.