Advertisment

கீர்த்தி சுரேஷ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ஓ.டி.டி பக்கம் நடிகர்கள் கவனம்.. மேலும் செய்திகள்

தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

author-image
WebDesk
New Update
கீர்த்தி சுரேஷ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. ஓ.டி.டி பக்கம் நடிகர்கள் கவனம்.. மேலும் செய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Advertisment

அண்ணாத்த படத்தில் பாசமிகு தங்கையாக நடித்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் டொவினோ தாமஸுடன் இணைந்து 'வாஷி' என்ற  படத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி. ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'வாஷி' திரைப்படத்தை கீர்த்தி சுரேஷின் சகோதரி, தனது ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து வெளியான 'மின்னல் முரளி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்', 'அயலான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

அழகுக் குறிப்பு தந்த நடிகை

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரை இன்ஸ்டாகிராமில் 1.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னை பின்தொடர்பவர்களுக்கு அழகு குறிப்புகள், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான தன்னுடைய பழக்கங்கள் குறித்த டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கிண்ணத்தில் சூடான தண்ணீர் மற்றும் சுத்தமான துண்டைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நீராவி எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

யூ-டியூப் தளத்தில் நம்பர் 1 டிரெண்டிங்கில் விஜய் பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அரபிக் குத்து என்ற பெயரில் இடம்பெற்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

பாடலை ஜோனிடா காந்தி பாடியுள்ளார். பாடல் வெளியே ஒரே நாளில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 6 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் முக்கிய நடிகர்களின் படங்கள்!

கொரோனா காரணமாக சினிமா திரையரங்குகள் அடிக்கடி மூடப்பட்டதாலும், 50 சதவீத அனுமதி என்பதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ஓடிடி தளங்களுக்கு புதிதாக வருவாயைக் கொட்டும் பிசினஸ் ஆக மாறியது.



கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 தமிழில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5, சோனி லிவ், ஆஹா என 7 ஓடிடி தளங்களுக்குள் தற்போது போட்டி நிலவி வருகிறது.

பொண்ணுக்கு அம்மாவாக இருப்பது எவ்வளவு கடினம்… காமெடியன் மதுரை முத்துவின் கண்ணீர் வாழ்க்கை

இருப்பினும் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.



பிரபலமான நடிகைகள் பலரும் ஏற்கெனவே ஓடிடி தொடர்களில் நடித்துவிட்டார்கள், சிலர் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஓடிடி தொடர்களுக்கு வந்த முக்கியமானவர்கள். நடிகைகளைப் போல தற்போது நடிகர்களும் வெப் தொடர்கள் பக்கம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.



இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் ஜீ 5 ஓடிடி தளத்தில் விமல் நாயகனாக நடித்துள்ள 'விலங்கு' வெப் தொடரும், ஆஹா ஓடிடி தளத்தில் சரத்குமார் நாயகனாக நடித்துள்ள 'இரை' வெப் தொடரும் வெளியாகியுள்ளன.

'பேமிலிமேன்' இயக்குனர்களான ராஜ், டீகே இயக்கத்தில் ஹிந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.



தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment