/indian-express-tamil/media/media_files/2025/10/18/biggboss-shkila-diwakar-and-kalai-2025-10-18-11-02-05.jpg)
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் அழிவுக்காலம் ஆரம்பம் என்ற பிரபல நடிகை ஷகிலா காட்டமாக பதில் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது மற்றும் தற்போது நடைபெற்ற வரும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே 9-வது சீசனில் போட்டியாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளது.
வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், பலூன் அக்கா அரோரா, அகோரி கலையரசன் உள்ளிட்ட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழ் மூவி வோல்ட் மீடியா யூடியூப் சேனலுக்கு நடிகை ஷகிலா அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முதலில் விஜய் டிவிக்கு அழிவு காலம். போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்களா?
திவாகர் சாதி ரீதியாக பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளார் என்று நான் புகார் கொடுத்துள்ளேன். அவரை எப்படி பிக்பாஸ் நிக்ழ்ச்சிக்கு தேர்வு செய்தார்கள்? வீட்டில் உள்ள அனைவருமே திவாகரை கார்னர் செய்கிறார்கள். இப்போது ஏன் அவனை கார்னர் செய்கிறீர்கள் விட்டுவிடலாமு என்று தான் எனக்கு தோன்றகிறது. ஆனால இதுதான் விஜய் டிவியின் ப்ளான். திவாகர் மீது சிம்பத்தி வந்துவிட்டது. இதனால் டி.ஆர்.பி எகிறும். இதனால் அவனை வெளியில் அனுப்பமாட்டார்கள். அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.
திவாகர் மெண்டல் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அதனால் அவனை பற்றி நான் பேசுவதே இல்லை. ஆனால் விஜய் டிவி போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது ஏன் யோசிக்கவே இல்லை? ஏன்னா அவர்களுக்கு டி.ஆர்.பி வேண்டும். அதுதான் டார்கெட். அதேபோல் அகோரி கலையரசன். அவன் மனைவி அவனை எப்படி எல்லாம் கீழ்த்தனமாக பேசினாள். ஆனால் இப்போது காரில் இருவரும் இணைந்துவிட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன் வீடியோ வெளியிடுகிறார்கள்.
அவன் அகோரியாக இருந்தபோது மனித மாமிசம் சாப்பிட்டதாக சொன்னான். அப்படி என்றால் அவன் ஒரு கேனிபல். அவனை எப்படி போட்டியாளர்கள் மத்தியில் விட்டு வைத்திருக்கிறீர்கள்? அவனும் அவன் மனைவியும் பிரிந்துவிட்டதாக சொல்லி நானே இருவரையும் தனித்தனியாக இன்டர்வியூ பண்ணேன். இன்ஸ்டாவில் வியூஸ் குநை்துவிட்டதா? அதற்காகத்தான் இப்படி பண்றீங்களா என்று கேட்டேன். அப்போது இல்லவே இல்லை என்று சொன்னார்கள். பிரிந்ததை சொல்லி இன்டர்வியூ கொடுத்து பணம் சம்பாதித்தார்கள். இப்போது சேர்ந்ததை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?
அப்போ இவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள். சேர்ந்ததை முன்பே சொல்லியிருந்தால், 3 பிள்ளைகள் இருக்கு, சேர்ந்துவிட்டார்கள் என்ற சந்தோஷப்பட்டிருப்போமே, இவர்கள் ஒரு வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்முன்பு வெளியிடுகிறார்கள். இதையெல்லாம் விஜய் டிவி நிர்வாகிகள் கவனிக்கமாட்டார்களா என்ற ஷகீலா கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.