/indian-express-tamil/media/media_files/2025/06/12/1e4TW6CsD4iCEbNFSv0c.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ள படம் அரசன். இந்த படத்தின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படம் தொடங்கி, சமீபத்தில் வெளியான விடுதலை பாகம் 2 படம் முதல் வித்தியாசமான வெற்றிப்படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன், தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிம்புவுடன் இணைந்துள்ளார். இந்த கூட்டணி இணைய வேண்டும் என்று ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி தாணு, தயாரிக்க உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்திற்கு அரசன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில், படத்தின் ப்ரமோ வெளியிடப்பட்டது. சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்து பிறகு கைவிடப்பட்ட நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் இந்த ப்ரமோவில் நடித்துள்ளார். கோர்ட் வாசலில் நின்று சிம்பு பேட்டி கொடுப்பது போல் இந்த ப்ரமோ தொடங்குகிறது. கோர்ட்டில் தன்மீது இரட்டை கொலை வழக்கு பொய்யானது என்ற சிம்பு சொல்ல, ப்ளாஷ்பேக்கில், சிம்பு ஒரு ராத்தரியில் 2 கொலை செய்துவிட்டு வருவது போல் காட்டப்படுகிறது.
இந்த ப்ரமோ தற்போது இணையத்தில வைரலாகி வரும் நிலையில், படம் குறித்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தீபாவளி தினத்தை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, அரசன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிம்பு நீளமான தலைமுடி, முகம் முழுவதும் ரத்ததத்துடன் ஆக்ரோஷமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
அகவிருள் அகற்றி
— Kalaippuli S Thanu (@theVcreations) October 20, 2025
அறிவொளி வீசிட
தீப ஒளி திருநாள்
வாழ்த்துகள்.#ARASAN 20M+ Views 🔥#VetriMaaran@SilambarasanTR_@anirudhofficial#SilambarasanTRpic.twitter.com/TBcsJFvd1a
அதே சமயம், படத்தின் டைட்டில், டீசருக்கு முன்பாக சிறிய வீடியோ, சமீபத்தில் வெளியான டீசர் என பல அப்டேட்கள் சிம்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் சிம்பு ரசிகர்களின் கனவத்தை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.