ட்ரெண்டான 'ரோஜா ரோஜா'... பைசன் படத்தில் சத்யன் குரல்: 'தென்னாடு' பாடல் வைரல்!

2004-ம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சத்யன். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

2004-ம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சத்யன். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

author-image
D. Elayaraja
New Update
Bison SOng Update

சமீபகாலமாக இணைதளங்களில் ட்ரெண்டாகி வந்த ‘ரோஜா ரோஜா’ பாடல்கள் மூலம் மீண்டும் பிரபலமான பாடகர் சத்யன் மகாலிங்கம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பைசன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில், சில படங்களையே இயக்கி இருந்தாலும், முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் பைசன். விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ராஷிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் அடுத்தடுத்து வெளியான பல அப்டேட்கள், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பைசன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தில் இடம் பெற்ற, தென்னாடு என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை சமீபகாலமாக ட்ரெண்டிங் பாடகராக இருக்கும் சத்யன் மகாலிங்கம் பாடியுள்ளார். 2004-ம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சத்யன். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

கலக்கப்போது யாரு என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் இடையில் சத்யனும் அவருடன் இணைந்து பாடியருந்தார், இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு, யுவன், ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய சத்யன், துப்பாக்கி படத்தில், குட்டிப்புலி கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு நேர்கொண்ட பார்வை படத்தில் பாடல் பாடியிருந்தார்.

Advertisment
Advertisements

சமீபத்தில், இவர் இளைஞராக இசை நிகழ்ச்சியில் பாடிய ‘ரோஜா ரோஜா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. அந்த பாடலை உண்மையாகவே பாடிய உன்னிக்கிருஷ்ணன் போலவே பாடுகிறார் என்று பலரும் பாராட்டியிருந்தனர். இதன் பிறகு பல யூடியூப் சேனல்கள் இவரை நேர்காணல் செய்து, அவரது பழைய நினைவுகளை பகிர்ந்கொள்ள உதவிய நிலையில், இதன் மூலம் பாடகர் சத்யன், தமிழ் சினிமாவில் பாடகராக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பைசன் படத்தின் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: