நகர்ஜூனா குடும்பத்தை வம்புக்கு இழுத்த பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா நடித்து பொங்கல் பண்டிகைக்கு வெளியான வீர சிம்ஹா ரெட்டி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மறைந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ்வை மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். இதனால் கோபமான அவரின் பேரன்கள் நாக சைதன்யா, மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
துணிவு மேக்கிங் வைரல்
அஜித் நடித்து எச்.வினோத் இயக்கிய துணிவு படம் கடந்த ஜனவரி 11 ந்தேதி வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதனிடையே துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வன விதி மீறலில் ஈடுபட்ட நடிகர் மீது வழக்கு பதிவு
கன்னட சினிமாவின் தயாரிப்பாளரும் முன்னணி நடிகரான தர்ஷன் தனது பண்னை வீட்டில் விதிமுறையை மீறி பறவைகளை வளர்த்து வருவதாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 வெளிநாட்டு வாத்துகள் பண்னை வீட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய அப்டேட்
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படம் பொம்மை. சைக்கலஜிக்கல் த்ரில்லர் பாணியில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொம்மை படத்தின் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு நாளை வெளியாகும் என எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய் விவாகரத்து குறித்து விநியோகஸ்தர் விளக்கம்
கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய்.
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023
ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX
கடந்த சில மாதங்களாக விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், பிரபல விநியோகஸ்தர் கோபி தனது ட்விட்டர் பதிவில், கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய். ரசிகர் சண்டை என்பது வேறு. அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil