காசு, பணம், துட்டு மணி... பணத்தை பற்றி எழுதி ஹிட்டடித்த டாப் பாடல்கள்; லிஸ்ட் ரொம்ப பெருசு

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் இருந்து பணத்தை வைத்து எழுதி ஹிட்டான பாடல்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் இருந்து பணத்தை வைத்து எழுதி ஹிட்டான பாடல்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
D. Elayaraja
New Update
Thuttu Movie song

இந்திய சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு திரைப்படங்களிலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இசையமைப்பாளர்களுக்கும் மதிப்பு அதிகமா உள்ளது. சோகம், மகிழ்ச்சி, இழப்பு என எந்த விதமான சூழ்நிலையாக இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு பாடல்கள் எழுதும் திறமையான கவிஞர்களும் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வகை பாடல்களும் ஒவ்வொரு வகையாக ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

Advertisment

அதே சமயம் ஜாலி பாட்டு என்றால் அதை அனைவருமே ரசிப்பார்கள். இந்த ஜாலி பாடல்கள் நண்பர்களுடன் சேர்ந்து பாடுவது, காதலி அல்லது மனைவியுடன் சேர்ந்து டூயட் பாடுவது போன்று அமைக்கப்படும். காதல், நட்பு, உறவுகள் இதை கடந்து, குறிப்பிட்ட ஒன்றை வைத்து பாடல்கள் எழுதுவத பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் இருந்து இருக்கிறது. அந்த வரிசையில் பணத்தை வைத்து எழுதி ஹிட்டான பாடல்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் (பணம் 1952)

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 2-வதாக வெளியான படம் பணம். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் தான் எழுதியிருந்தார். அதில் முக்கியமான ஒரு பாடல் தான் பணத்தை எங்கே தேடுவேன் என்ற பாடல். இந்த படத்தை இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன் தான் இந்த பாடலையும் பாடியிருந்தார்.

காசேதான் கடவுளப்பா (சக்கரம் 1961)

ஜெமினி கணேசன் ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் வெளியான சக்கரம் என்ற படத்தில் இடம் பெற்ற காசேதான் கடவுளப்பா என்ற பாடல் இன்றும் பிரபலமான பாடலான ஒலித்துக்கொண்டிருக்கிறது. கவிஞர் வாலி எழுதிய இந்த பாடலை, டி.எம்.செளந்திரராஜன் பாடியிருந்தார்,

Advertisment
Advertisements

பணம் என்னடா பணம் பணம் (அந்தமான் காதலி 1978)

சிவாஜி கணேசன், சுஜாதா நடிப்பில் வெளியான அந்தமான் காதலி என்ற படத்தில் இடம் பெற்ற பணம் என்னடா பணம் பணம் என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை டி.எம்.செளந்திரராஜன் பாடியிருந்தார்.

எட்டனா இருந்தா எட்டூரு (எல்லாமே என் ராசா தான்1995)

ராஜ்கிரண் இயக்கிய தயாரித்து நடித்த படம் எல்லாமே என் ராசா தான். சங்கீதா நாயகியாக நடித்த இந்த படத்தில், கே.ஆர்.விஜயா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில், வடிவேலு பாடிய ‘எட்டனா இருந்தா எட்டூரு எம்பாட்டை கேட்கும்’ என்ற பாடல், வடிவேலுக்கு புதிய அடையாளத்தை கொடுத்தது, இந்த பாட்டு தான் திரையுலகில் வடிவேலு பாடிய முதல் பாடல்..

காசு மேலே காசு வந்து (காதலா காதலா 1998)

கமல்ஹாசன் பிரபுதேவா கூட்டணியில் வெளியான படம் காதலா காதலா. மறைந்த நடிகை செளந்தர்யா, ரம்பா இணைந்து நடித்த இந்த படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இதில் கமல்ஹாசன் – உதித் நாராயணன் இணைந்து பாடிய காசு மேல காசு வந்து பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இன்றும் ஒரு பிரபலமான பாடலாக இருக்கிறது.

பளபளக்குது புது நோட்டு (துள்ளாத மனமும் துள்ளும் 1999)

விஜய் நடிப்பில் எழில் இயக்கத்தில் வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், என் இசை பாடிவரும் என்ற பாடல் பலருக்கும் ஃபேவரெட். அதேபோல் பணத்தை பற்றி வைரமுத்து எழுதிய பளபளக்குது புது நோட்டு என்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை கோபால்ராவ் என்பவர் பாடியிந்தார்.

பணம் மட்டும் வாழ்க்கையா (சொல்ல மறந்த கதை 2002)

சேரன், ரதி நடிப்பில் தங்கபச்சன் இயக்கத்தில் வெளியான படம் சொல்ல மறந்த கதை. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில், சோகபாடலாக இடம் பெற்ற பணம் மட்டும் வாழ்க்கையா என்ற பாடல், பலரின் இதயத்தை கவர்ந்த ஒரு பாடல். இன்றும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இளையராஜா இந்த பாடலை பாடியிருந்தார்.

நோ மணி நோ ஹனி (வானம் 2011)

சிம்பு, அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் வெளியான படம் வானம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இநத படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிம்பு – யுவன் கூட்டணி என்றாலே பாடல்கள் ஹிட்டாகும் அந்த வரிசையில் இந்த படத்தில் இடம் பெற்ற நோ மணி நோ ஹனி பாடல் இன்னும் இளைஞர்களின் ஃபேவரெட் பாடலாக இருக்கிறது.

காசு, பணம், துட்டு, மணி (சூது கவ்வும் 2013)

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, கருணாகரன், அசோக் செல்வன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய ஹிட்டான நிலையில், படத்தில் வந்த காசு, பணம், துட்டு, மணி பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இந்த பாடலை கானா பாலா எழுதி அவரே பாடியிருந்தார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: