Advertisment

சிங்கிள் சிங்கமாக ரஜினிகாந்த்... ஜெயிலரை பார்த்து ஒதுங்கியது இத்தனை படங்களா?

ஜெயிலர் என்ற பிரம்மாண்ட படத்திடம் சிக்காமல் இருக்க இந்த வாரமே தமிழில் 7 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer And Other Movies

Jailer And Other Movies

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில்,  இந்த படத்துடன் சிக்காமல் இருக்க இந்த வாரம் தமிழில் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.

Advertisment

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழகத்தில் ரசிகர் ஷோ மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜெயிலர் படத்தின் முதல் ஷோ காலை 9 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் முதல் நாளில் வசூலை வாரி குவிக்கும் நோக்கில் அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க  7 சிறு பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் போன்ற பிரம்மாண்ட படத்திடம் சிக்காமல் இருக்க இந்த வாரமே தமிழில் 7 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் விவரத்தை பார்க்கலாம்.

சுப்ரமணியபுரம் ரீ-ரிலீஸ்

கடந்த 2008-ம் ஆண்டு சசிகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சுப்ரமணியபுரம். ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் 15 வருடங்களை நிறைவு செய்த நிலையில், வரும் ஆக்ஸ்ட் 4-ந் தேதி தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

வெப்

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வெப் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 4-ந் தேதி திரைக்கு வர உள்ளது

பிரியமுடன் பிரியா

சன் டிவி தொடர்களில் நடித்து பிரபலமான லீஸா எக்ளர்ஸ் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள படம் பிரியமுடன் பிரியா. அசோக் குமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ள நிலையில், இப்படமும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது.

லாக்டவுன் டைரி

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாக்டவுன் டைரி திரைப்படத்தில்  விஹான் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் போன்ற அனுபவ நடிகர்கள் நடித்துள்ள இப்படம் ஆக்ஸ்ட் 4-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

முருடன்

ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள முருடன் திரைப்படத்தை ராகவா நூலேதி இயக்கியுள்ளார். சஞ்சிதா படுகோன் ஹீரோயினாக நடித்துள்ள திகில் படமான முருடன், வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி வெளியாக உள்ளது.

சான்றிதழ்

மதுரை சம்பவம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நாயகன் ஹரிகுமார் ஹீரோவாக நடித்துள்ள படம் சான்றிதழ், மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா, நடிகர் ராதாரவி, அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 4 (நாளை) ரிலீஸ் ஆக உள்ளது.

கல்லறை

ஏபிஆர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கல்லறை. தீப்தி திவான், பிரேம பிரியா, ரதி ஜவஹர், சோகோ ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 4-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment