Advertisment

பெட்ரூம் சீன், ரொமாண்டிக் கிஸ்... லஸ்ட் ஸ்டோரீஸ் 2-ல் நடிக்க தமன்னாவுக்கு சம்பளம் இத்தனை கோடி!

தமன்னா, சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamannah lust stories

லஸ்ட் ஸ்டோரீஸ் தமன்னா

சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆந்தாலஜி தொடரில் நடித்த நடிகை தமன்னா பல கோடிகள் சம்பளம் பெற்றதாக இணையத்தில் வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 2004-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஷெஹ்ரா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான தமன்னா அடுத்து 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், தனுஷூடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளதார்.

மேலும் பிரபாஸ் ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமான தமன்னா தெலுங்கிலும் பல வெற்றிக்களை கொடுத்துள்ளார். இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் என நடித்து வநத தமன்னா, சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலாக காவாலா பாடலில் தமன்னாவின் டான்ஸ் வரவேற்பை பெற்று வருகிறது.

அதெனைத் தொடர்ந்து சமீபத்தில் தமன்னா நடித்த ஜீ கர்டா என்ற வெப் தொடர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியானது. சமீபத்தில் விஜய் வர்மாவுடன் தனது காதலை உறுதி செய்த தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடனே நடித்திருந்தார். இதில் பேயாக நடித்த தமன்னா, இதுவரை இல்லாத அளவுக்கு  கவர்ச்சி காட்சிகளில் அதிகம் நடித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக படுக்கை அறை காட்சி, முத்த காட்சி என விஜய் வர்மாவுடன் தமன்னா காட்சிய நெருக்கம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில்  நடிக்க தமன்னா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment