தியேட்டரில் படுதோல்வி, ஒ.டி.டி தளத்தில் மாஸ் என்ட்ரி: கொலையாளிக்கு ஸ்கெச்ட் போடும் ஹீரோயின்!

தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் ஒடிடி தளத்தில் கடும் விமர்சனங்களை பெற்று வருவதும் வழக்கம் தான். அந்த வகையில் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த ஒரு படம் தற்போது ஒடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் ஒடிடி தளத்தில் கடும் விமர்சனங்களை பெற்று வருவதும் வழக்கம் தான். அந்த வகையில் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த ஒரு படம் தற்போது ஒடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

author-image
D. Elayaraja
New Update
Tamil Cinema

தியேட்டரில் வெளியானபோது பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்காத ஒரு படம், ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில், த்ரிஷா முக்கிய நாயகியாக நடித்திருந்தார். அவரை சுற்றிதான் கதை பின்னப்பட்டிருக்கும்.

Advertisment

கொரோனா காலத்திற்கு முன்புவரை ஒரு திரைப்படம், படமாக்கப்பட்டு தியேட்டரில் வெளியாகும். அதன்பிறகு அந்த படத்தில் சேட்லைட் உரிமையை வாங்கிய டிவி சேனல் சில மாதங்கள் கழித்து தங்களது சேனலில் ஒளிபரப்பு செய்யும். தியேட்டரில் படத்தை பார்க்க முடியாமல் தவறிவிட்டவர்கள், டிவி சேனலில் ஒளிப்பாகும்போது பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் விதித்த லாக்டவுன் காரணமாக, ஒடிடி தளங்களின் பயன்பாடு அதிகமாகியது. இதனால் அந்த காலக்கட்டத்தில் நேரடியாக சில தமிழ் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றது. இப்படி வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம், ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு ஒடிடி தளத்திற்கு ஒரு வியாபாரம் உருவானது. 

தற்போது ஒரு படத்தின் ஒடிடி உரிமம் விற்பனை ஆன பிறகுதான் அந்த படத்தின் ரிலீ்ஸ் தேதி அறிவிக்கப்படும் நிலை உள்ளது. இதில் தியேட்டரில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியடைந்த படங்களும் இருக்கிறது. அதே படம் ஒடிடி தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களும் இருக்கிறது. அதேபோல் தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் ஒடிடி தளத்தில் கடும் விமர்சனங்களை பெற்று வருவதும் வழக்கம் தான். 

Advertisment
Advertisements

அந்த வகையில் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த ஒரு படம் தற்போது ஒடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் எந்த படம் பார்க்ஸ்ஆபீஸில் வெற்றியை பெறும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, சமீப காலங்களில், எந்த பரபரப்பும் இல்லாமல் வெளியான சிறிய படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. 

அந்த வகையில் ரூ30 கோடி பட்ஜெட்டில் தயாரான ஒரு படம் தியேட்டரில், ரூ3 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அதேபடம் ஒடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அந்த படம் திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஐடென்டிட்டிதான். தியேட்டரில் வெளியானபோது பட்ஜெட்டில் பாதியை கூட வசூல் செய்யாத இந்த படம், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜீ5யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கேரளாவில் ரூ.3.5 கோடி மட்டுமே வசூலித்தது. மேலும் உலகளவில் ரூ.16.51 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: