வாரிசு படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்த சம்பவம்
விஜய் நடிப்பில் இன்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் வாரிசு படத்தை பார்த்து வருகின்றனர். விஜய் சில ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப பின்னணியில் நடித்துள்ள வாரிசு படத்தை பார்ப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை வந்துள்ளார். இது தொடர்பாக போட்டோ வெளியிட்டுள்ள அவர் எங்கு சென்றாலும் பொங்கலுக்கு சென்னை வந்துதான் ஆக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
வாரிசு படத்திற்கு லோகேஷ் கனகராஜ் விமர்சனம்
விஜய் நடிப்பில் இன்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் வாரிசு படத்தை பார்த்து வருகின்றனர். விஜய் சில ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப பின்னணியில் நடித்துள்ள வாரிசு படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரொம்ப நாள் கழிச்சி விஜய் சாரை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
துணிவு படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு
பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மலோசியாவில் வெளியான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அங்கு தியேட்டர்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
வாரிசு படம் பார்க்க தோழிகளுடன் வந்த நடிகை
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்து வரும் நிலையில், நடிகை த்ரிஷா பிரபல திரையரங்கு ஒன்றில் வாரிசு படம் பார்க்க தனது தோழிகளுடன் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் நடிபக்பில் வெளியான துணிவு படத்தையும் த்ரிஷா ரசிகர் ஷோவில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
அரசியல் பேசும் துணிவு
சமீபத்தில் தமிழ்நாடு ஆளுனர் மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆளுனரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அஜித் நடிப்பில் இன்று வெளியான துணிவு படத்தில் ரவிந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலையை காட்டாதே என்று வசனம் பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil