/indian-express-tamil/media/media_files/2025/10/04/vj-sidhu-amh-2025-10-04-12-23-14.jpg)
நான் எங்கு சென்றாலும் வி.ஜே.சித்து படம் எப்போது என்று தான் கேள்கிறார்கள். அதனால் நான் அவரை பயமுறுத்திவிட்டேன். இப்போது அவர் படத்தின் ஸ்கிரிப்பை சிறப்பாக செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம்ஸ். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிரபுதேவாவின் தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இந்நிறுவனம், அடுத்து ஜெயம்ரவியின் போகன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன், கோமாளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பி.டி.சார், அகஸ்தியா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார் ஐசரி கணேசன். தொழிலதிபரான இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த 10 படங்களின் இயக்குனர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் அடங்கிய இந்த பட்டியலில், வி.ஜே.சித்து பெயரும் இடம் பெற்றிருந்தது. இவர் இயக்கும் படம் தொடர்பான வெளியான ப்ரமோவில், ஐசரி கணேசன், நடிகர் இளவரசு ஆகியோருடன் வி.ஜே.சித்தும் நடித்திருந்தார். இந்த ப்ரமோ பெரும் வைரலாக பரவிய நிலையில், பலருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ishari Ganesh Recent
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2025
- All the movies I'am producing are from Super Content Films.
- The lineup includes #MookuthiAmman2, #VigneshRaja’s film, #MariSelvaraj’s film, and #Vadachennai2.
- Currently, 6 films are in shooting and 6 films are in pre-production.pic.twitter.com/xYJ7IBmj9k
இது குறித்து பேசிய ஐசரி கணேசன், 10 இயக்குனர்களின் பட்டியலில், வி.ஜே.சித்து படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எங்கு சென்றாலும் என்னிடம் அந்த படத்தை பற்றி விசாரிக்கிறார்கள். ஒருமுறை துபாய் சென்றிருந்தபோது 7 வயது சிறுமி இது பற்றி விசாரித்தார், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததாகவும், மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது பற்றி வி.ஜே.சித்துவிடம் சொன்னபோது அவர் என்னை நேரில் சந்தித்தார். நம்ம படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்போ ஷூட்டிங் போறீங்க என்று கேட்டேன்.
"I'm currently producing 10 Films, It's very shocking that everyone is asking update about VJSiddhu's #Dayangaram😀. When I told this to #VJSiddhu, he said 'i am getting scared and so, scene by scene ah Sethukittu varen🧨'. Shooting soon⌛"
— AmuthaBharathi (@CinemaWithAB) October 4, 2025
- #IshariGaneshpic.twitter.com/UfYcpbl0Ap
சார் நீங்கள் சொன்னதை பார்த்து எனக்கு சற்று பயமாகிவிட்டது. அதனால் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும். நான் ஸ்கிரிப்டை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எழுதி முடிக்கிறேன் என்று சொன்னார். சரி ஓகே நீங்கள் எப்போ வேண்டுமானாலும் ஷூட்டிங் போக, ஆனா படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். நாங்கள் எடுக்கும் படம் எல்லாமே சூப்பர் கண்டன்ட் தான். மூக்குத்தி அம்மன் 2, விக்னேஷ் ராஜா படம், மாரி செல்வராஜ் படம், வட சென்னை 1, விஷ்ணுவிஷாலின் கட்டா குஸ்தி 2, அருண்ராஜா காமராஜ் படம், என 6 படங்கள் ஷூட்டிகில் இருக்கிறது. 6 படம் ப்ரீபுரோடக்ஷனில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.