Advertisment

எம் ஜி.ஆர் பட ஷூட்டிங்… சிறுத்தையுடன் வாக்கிங் சென்ற சாவித்திரி… அது எந்தப் படம்?

நடிகையர் திலகம் சாவித்ரி படப்பிடிப்பு இடைவேளையின் போது ஸ்டூடியோவுக்கு உள்ளே அந்த சிறுத்தையுடன் வாக்கிங் சென்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR Savithri

சிறுத்தையுடன் சாவித்ரி

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்த நடிகை சாவித்ரி சிறுத்தையுடன் வாக்கிங் வந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் மக்களுக்கு தேவையாக கருத்துக்கள் அமையும் வகையில் திரைக்கதை அமைக்கும் பணியை செய்த எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் தனது படங்களில் வருவது போல் ரியல் லைஃபிலும் மக்களுக்காக பல நலத்திட்டங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டமாக 60-களில் வெளியான படம் வேட்டைக்காரன். 1964-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி, எம்.ஆர்.ராதா, நம்பியார், அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிவாஜியின் பெரிய பட்ஜெட் படமாக சிவாஜி நடித்த கர்ணன் படத்துடன் வேட்டைக்காரன் படம் வெளியானது.

இந்த இரு படங்களின் ப்ரமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தபோது, கர்ணன் படத்திற்காக பெரிய தேர்வு இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு ப்ரமோஷன் செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக எம்.ஜி.ஆர் தனது வேட்டைக்காரன் படத்தில் முக்கிய கேரக்டரான சிறுத்தையை கொண்டு வந்து ப்ரமோஷன் செய்திருந்தது அப்போது பெரும் வைரலாக பரவியது. இறுதியில் கர்ணன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், வேட்டைக்காரன் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

குறிப்பாக வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற சிறுத்தையின் புத்திசாலித்தனமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதனிடையே வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகையர் திலகம் சாவித்ரி படப்பிடிப்பு இடைவேளையின் போது ஸ்டூடியோவுக்கு உள்ளே அந்த சிறுத்தையுடன் வாக்கிங் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment