Advertisment

சாப்பாட்டுக்காக எம்.எஸ்.வி-யுடன் சண்டை... என்னை தொடாதே என்று பாடிய டி.எம்.எஸ் : ஹிட் பாடலின் பின்னணி

க்ளாசிக் சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்திரராஜன் தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

author-image
D. Elayaraja
Aug 31, 2023 17:28 IST
TMS MSV

டி.எம்.எஸ் - எம்.எஸ்.வி

தமிழ் சினிமாவில் க்ளாசிக் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கிய இன்றைய இளம் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, தனது இசை மற்றும் பாடல்கள் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment

அதேபோல் க்ளாசிக் சினிமாவின் முன்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சௌந்திரராஜன் தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதேபோல் எம்.ஜி.ஆர், சிவாஜி என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களின் குரல் போல் தனது குரலை மாற்றி பாடும் வல்லமை கொண்ட டி.எம்.எஸ் 1950- தொடங்கி 72 வரை தனது குரலால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இப்படி இருவருமே க்ளாசிக் சினிமாவின் அடையாளமாக இருந்துள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு ஹிட் பாடல் உருவான சுவாரஸ்யமாக தகவல் தற்போது கிடைத்துள்ளது. டி.எம்.எஸ். வாழ்க்கையை ஆவணப்பமாக எடுத்த இயக்குனர் விஜய் ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி கூறியுள்ளார்.

டி.எம்.எஸ் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார். பணம் இல்லாதபோது ஒரு மாதிரியும் பணம் இருக்கும்போது ஒரு மாதிரியும் இருக்கவே மாட்டார். அதேபோல் யாரை பற்றியும் அவசியமின்றி பேசமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பார். இளையராஜாவுக்கும் அவருக்கு பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் அவரிடம் வந்து பேசியவர்கள் இந்த விஷயத்தை பெரிதாக்கி இருவரையும் பிரித்துவிட்டார்கள்.

மற்றபடி இவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவருக்கு போட்டியாக வந்ததாக கூறப்படும் எஸ்.பி.பி கூடவே அவ்வளவு நட்பாக இருந்தவர் டி.எம்.எஸ். அதேபோல் எப்போதும் டைமுக்கு சாப்பிட வேண்டும் என்பது டிஎம்எஸ் வழக்கம். அப்படி ஒருநாள் டைமுக்கு சாப்பிட வேண்டும் என்று சொல்லும்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பாடல் ரெக்கார்டிங் இருக்கு என்று கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத டி.எம்.எஸ் சட்டுனு கிளம்விட்டார். அதன்பிறகு எம்.எஸ்.வி என்னை அழைத்து என்னய்யா உங்க ஆளுக்கு மட்டும் தான் பசிக்குமா நாங்களாம் மனுஷன் இல்லையா என்று கேட்டார். ஆனாலும் அது அன்றுடன் முடிந்துவிட்டது. அடுத்த நாள் அந்த பாடலை நன்றாக ரெக்கார்டு செய்தார்கள். அந்த பாடல் தான் நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே...

கோபித்துக்கொண்டு போனாலும் அந்த பாடல் நன்றாக வரவேண்டும் என்று அவரை மீண்டும் அழைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்வி, கோபித்துக்கொண்டு வந்தாலும் நம் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று பாடகர் டி.எம்.டிஸ் நினைத்ததானால் தான் இப்படி ஒரு ஹிட் பாடல் ஒருவானது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment