scorecardresearch

போண்டாமணி மகளுக்கு செலவே இல்லாமல் காலேஜ் சீட்: உதவிய தயாரிப்பாளர் யார்?

விவேக் மற்றும் வடிவேலுவுடன் போண்டா மணி நடித்த காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

Bondamani
நடிகர் போண்டா மணி

சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமாக ஐசரி கணேசன், தனது மகளுக்கு ஒரு பைசாக கூட பணம் வாங்காமல் தனது பல்கலைகழகத்தில் படிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாக காமெடி நடிகரான போண்டா மணி தெரிவித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்டு தமிழ் சினிமாவில் பல படங்களில் கமெடி வேடத்தில் நடித்துள்ளவர் போண்டாமணி. 1991-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பவுணு பவுணுதான் என்ற படத்தின் மூலம் அறிமுகமான போண்டாமணி தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். முக்கியமாக விவேக் மற்றும் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போண்டா மணிக்கு சினிமா பிரலங்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியிருந்தனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோது தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கரைலகழகத்தின் உரிமையாளருமான ஐசரி கணேசன் அவரை பார்த்துள்ளார்.

இந்த சந்திப்பில் அவரை நலம் விசாரித்த ஐசரி கணேசன் போண்டா மணியின் மகள் பிளஸ் 2 முடித்தவுடன் தனது பல்கலைகழகத்தில் இலவசமாக பட்டப்பிடிப்பு படிக்க சீட் தருவதாக உறுதி அளித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் தேர்ச்சி பெற்றுள்ள போண்டாமணியின் மகளுக்கு ஐசரி கணேசன் தனது பல்கலைகழகத்தில் இலவசமாக சீட் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள போண்டாமணி, எனக்கு 2 குழந்தைகள். இதில் எனது மகள் பிளஸ் 2 படித்து வந்தார். நான் உடலை சரியில்லாமல் இருந்தபோது என்னை பார்க்க வைத்த ஐசரி கணேசன் சார் எனது மகள் பிளஸ் 2 பாஸ் ஆனவுடன் அவரது பல்கலைகழகத்தில் இலவசமாக சீட்  தருவதாக கூறியிருந்தார். அவர் எதோ சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னபடி எனது மகளுக்கு சீட் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் எனது மகள் 600-க்கு 400 மார்க் எடுத்து பாஸாகியுள்ளார். அவருக்கு ஒரு பைசா கூட வாங்காமல் என்ட்ரன்ஸ் பீஸ், அப்ளிகேஷன் பீஸ் என எதுவும் இல்லாமல் கம்யூட்டர் சைன்ஸ் பாடபிரிவில் சீட் வழங்கியுள்ளார் இது கண்டிப்பாக பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil comedy actor bondamani thanks to business man isari ganesan