Advertisment

உதயநிதி படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் முக்கிய கேரக்டர் : மாமன்னன் புதிய அப்டேட்

சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாக பரவியது

author-image
WebDesk
Jun 06, 2023 18:23 IST
Murugados

மாமன்னன் போஸ்டர்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் இயக்குனர் ஏ,ஆர்.முருகதாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பரியேறும் பெருமாள், கர்ணன் என தான் இயக்கிய முதல் 2 படங்களிலும் ஒரு சமூகத்தில் பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள 3-வது படம் மாமன்னன். நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலிலின் கடைசி படம் மாமன்னன் என்று அவரே அறிவித்துவிட்டதால் படம் பெரும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Murugados2

உதயநிதி - முருகதாஸ்

இந்நிலையில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக அவரவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தான் இயக்கிய கத்தி மற்றும் ஏழாம் அறிவு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த முருகதாஸ் தற்போது வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், தனது இயக்கத்தில் வெளியான 'துப்பாக்கி' மற்றும் 'ஏழாம் அறிவு' ஆகிய படங்களை வெளியிட தனக்கு உதவிய உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. "மாமன்னன்" ஒரு பெரிய வெற்றிப்படமாக அமையும். "துப்பாக்கி' மற்றும் 'ஏழாம் அறிவு' ஆகிய படங்கள் வெளிவர உதவிய உதயநிதிக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Udhyanidhi #Ar Murugadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment