நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். சினிமா பின்புலம் இல்லாமல் தனது அயராத உழைப்பினால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள அஜித், தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உள்ளார். மேலும் தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்று அவர் பல வருங்களுக்கு முன்பே மன்றங்களை களைத்திருந்தாலும், அவருக்கான ரசிகர்கள் வட்டாரம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இதன் காரணமாக அவர் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போன்று வரவேற்பு கொடுப்பது படம் வெளியாகும் ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். படங்களுக்கே அப்படி என்றால் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று யோசித்து பார்த்தால் மளைத்துவிடும்.
அன்றைய தினம்தான் இன்று மே1 நடிகர் அஜித்குமார் பிறந்தநாள். அவரின் ரசிகர்கள் திருவிழாவை விட பெரும் கொண்டாட்டமாக கொண்டாடப்படும் நாள். இன்றைய தினத்தில் திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நடிகர் அஜித்துக்கு பிறந்நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விக்னேஷ் சிவனும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்கண்டிஷ்னல் லவ் என்றென்றும் நிரந்தரம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் விக்கி என்ன மனுஷன் யா நீ என்று வெளியிட்டுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும்,இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் விக்கியின் கதையில் திருப்தி இல்லாத லைகா நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குனர் என்று அறிவித்தது. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்ட இந்த படத்தின் டைட்டிலும் இன்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை நழுவ விட்ட விக்னேஷ் சிவன் அடுத்து பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் அதே நாளில் இந்த படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே தான் அஜித்துடன் இருக்கும் பழைய புகைப்படங்களை பகிர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது இணையத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“