வீட்டுல விசேஷம்… சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ மகிழ்ச்சி அறிவிப்பு!

Samayal Manthiram VJ Girijasree shares about her pregnancy Tamil News: சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Tamil Entertainment News: samayal manthiram fame vj girijasree announces her pregnancy via insta post

Tamil Entertainment News: சினிமா திரைப்படங்களை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்க டாக்டர்களுடன் பல இளைஞ்சர்களும், கணவன்மார்களும் கேட்கும் அந்தரங்க கேள்விகளை சற்றும் முகம் சுளிக்காமல் கேட்டு, அதற்கு டாக்டரிடம் விளக்கத்தையும் கேட்டு இளைஞர் மத்தியில் பிரபலமானவர் தான் அந்தரங்கம் நிகழ்ச்சி புகழ் கிரிஜா.

கிரிஜா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் தொகுப்பாளினியாக இருந்த போதே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், வந்தது எல்லாம் கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம்.

சமையல் மந்திரம் கிரிஜாஸ்ரீ இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கவுள்ளதாக அறிவித்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அம்மாவாக போவதாகவும் அவரது சமீபத்திய இன்ஸ்டா பதிவில் அறிவித்துள்ளார் கிரிஜா ஸ்ரீ. அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் பார்க்க வளைகாப்பு போல இருந்தாலும், அது வளைகாப்பு இல்லை இரண்டாவது trimesterல் நடக்கும் ஒரு விசேஷம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil entertainment news samayal manthiram fame vj girijasree announces her pregnancy via insta post

Next Story
Roja Serial : ரோஜாவுக்கு செக் வைக்கும் அன்னப்பூரணி : செம்ம கடுப்பில் டைகர் மாணிக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com