சின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை!

புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில், இன்று அதிகாலை பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சின்னத்திரை உலகில் மற்றொரு பேரதிர்ச்சியான சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது. சன் டிவியின் பிரபல ‘சுமங்கலி’ தொடரில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த பிரதீப் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ‘பாசமலர்’ எனும் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில், இன்று அதிகாலை பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளே என்று கூறப்படுகிறது. இருப்பினும், உண்மையான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, பிரதீப்பின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு நாடகங்களில் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close