தமிழ்க் கடவுள் முருகன் : மகனுக்காக போர்க்களம் செல்லும் பார்வதி தேவி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கடவுள் முருகன்’ சீரியலில், மகனுக்காக பார்வதி தேவி போர்க்களம் செல்லும் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கடவுள் முருகன்’ சீரியலில், மகனுக்காக பார்வதி தேவி போர்க்களம் செல்லும் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கkaள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் பக்தி தொடர் ‘தமிழ்க் கடவுள் முருகன்’. முருகப்பெருமானின் திருக்கதையைச் சொல்லும் இந்த தொடர், கந்த புராணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

முருகனின் பிறப்பு முதல் சூரசம்ஹாரம் வரை முருகனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் இந்த தொடரில் சொல்லப்பட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில், மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் தொடராக ‘தமிழ்க் கடவுள் முருகன்’ அமைந்துள்ளது. விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது இந்த தொடர்.

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுள் ஒன்றான ‘மாப்பிள்ளை’யில் நடித்த இந்திரா பிரியதர்ஷினி, இதில் பார்வதி தேவியாக நடிக்கிறார். சிவபெருமானாக சசிந்தர் புஷ்பலிங்கம் நடிக்க, முருகப்பெருமானாக பேபி அனிருதா நடிக்கிறார்.

தற்போது இந்தத் தொடரில், அரக்கர்களுள் ஒருவனான மகிஷாசுரன் தேவர்களை சிறைபிடிக்கிறான். அவர்களை மீட்க முருகப்பெருமானும் போர் புரியக் கிளம்புகிறார். ஆனால், மகிஷாசுரனை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. முருகப்பெருமானின் தேவி கவசமும் தோற்றுவிட, தன் மகனுக்காக போர்க்களம் புகுகிறார் பார்வதி தேவி. இந்தக் காட்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

×Close
×Close