Advertisment

ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்... பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ படக்குழு : ப்ரமோ வைரல்

சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரில் ப்ரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
leo Sanjay Dutt

லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக லியோ படக்குழு சஞ்சய் தத் கேரக்டரில் மாண்டேஜ் கிளிப்பைப் வெளியிட்டு லியோ அப்டேட் கொடுத்துள்ளது.

Advertisment

விக்ரம் படத்தில் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ. விஜய் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவரது அப்பாக ஆண்டனி தாஸ் கேரக்டரில் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் சஞ்சய் தத் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஆண்டனி தாஸ் கேரக்டரில் மாண்டேஜ் கிளிப்பைப் லியோ படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

லியோ படம் லோகேஷின் எல்சியூ வகையில் வருமா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள மாண்டேஜ் கிளிப்பின் கலர்டோன் மற்றும் காட்சிகள் அனைத்தும், இதற்கு முன்பு வெளியான விக்ரம் மற்றும் கைதியில் காணப்பட்டதைப் போலவே உள்ளது. இதனால் லியோ எல்சியூவின் ஒரு பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

அதே சமயம் ஹாலிவுட்டில் டேவிட் க்ரோனன்பெர்க்கின் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லியோ என்றும் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் இந்த படத்தில் முன்னாள் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில  வன்முறை வேண்டாம் என்று இருக்கும் விஜய் ஒரு வன்முறை சம்பவம் காரணமாக பிரபலமாகிறார்.  அவரை தொலைக்காட்சியில் பார்த்த அவரது மூத்த சகோதரர் பழிவாங்க அவரை தேடி வருகிறார்.

அதேபோல் தான் லியோ முன்னோட்டத்தில் விஜய் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலரும் அவரை தேடி வில்லன்கள் வருவது போலவும் காட்சிகள் இருந்தது. இதன் மூலம் லியோ படததில் சஞ்சய் தத் மூத்த சகோதரனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், சஞ்சய் தத் தொடர்பான ப்ரமோவை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்களுக்கு எங்கள் அனைவரிடமிருந்தும் ஒரு சிறிய பரிசு சஞ்சய் தத் சார்! உங்களுடன் பணியாற்றுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிப்பிட்டுள்ளார்.

லியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சஞ்சய் தத் கடந்த ஆண்டு வெளியான யாஷின் கேஜிஎஃப்: சாப்டர் 2 படத்தின் மூலம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sanjay Dutt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment