Advertisment

வாரிசு vs துணிவு: அட்வான்ஸ் புக்கிங் யுத்தத்தில் ஜெயித்தது யார்?

வாரிசு, துணிவு அஇந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
வாரிசு vs துணிவு: அட்வான்ஸ் புக்கிங் யுத்தத்தில் ஜெயித்தது யார்?

பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள வாரிசு துணிவு படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெளிநாடு புக்கிங்கில் துணிவை வாரிசு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. இவர்கள் படங்கள் சாதாரன நாட்களில் வெளியானால் கூட திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடி வருவது வழக்கமாக நடைபெறு நிகழ்வு. ஆனால் பண்டிகை நாட்களில் வெளியானால் அவர்களின் ரசிர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

அதேபோல் இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் ஒன்றாக வெளியானால், இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது விருப்பமான நடிகரின் படத்திற்கு ப்ரமோஷன் செய்வார்கள். அந்த மாதிரியான நிலை தற்போது தமிழகத்தில் பரபரப்பான நிகழ்வாக மாறியுள்ளது. விஜய் நடிப்பில் வாரிசு அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் திரைக்கு வர உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

publive-image

வாரிசு

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார் பிரகாஷ்ராஜ், ஷாம், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு இயக்குனர் எச.வினோத், நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. மஞ்சுவாரியார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பொங்கல் வெளியீடு

இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் அவ்வப்போது வாரிசு மற்றும் துணிவு படங்களின் அப்டேட்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் துணிவு படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயிண் மூவிஸ் வெளியிடும் நிலையில், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழகத்தில் இந்த இரு படங்களும் சமஅளவில் தியேட்டர்களை பகிர்ந்துகொள்ளும் என்ற நிலை இருந்தாலும், வெளிநாடுகளில் எந்த படத்திற்கு அதிக புக்கிங் ஆகியுள்ளது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு படங்களுக்காக வெளிநாடு புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்தில் வாரிசு படம் முன்பதிவில் 12.25 லட்சமும், துணிவு படம் 2.95 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment