Advertisment

தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகர்... தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை ஒளி மணிமாறன்

அன்னை தெரசாவின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு, உலக மக்கள் சேவை மையம் தொடங்கிய திருவண்ணாமலையில் உள்ள பி.மணிமாறனின் இதுவரை 15,000 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. உரிமை கோரப்படாத உடல்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.

author-image
Janardhan koushik
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manimaran

வேலூரில் உள்ள தொழுநோய் மையம் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும், பராமரிப்பாளர் நோயிலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.

15 வயதில்  குறிப்பாக கல்வியில் தோல்வியடைந்த பிறகு, சமூகத்திற்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால், இந்த கருத்துக்கு விதி விலக்காக திருவண்ணாமலையில் மிகவும் பிரபலமான 37 வயதான பி. மணிமாறன் என்பவர் இதை மாற்றி காட்டியுள்ளார். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை நகரத்தை விட்டுவிட்டு கொல்கத்தா வரை பயணிக்க முடிவு செய்தார்.

Advertisment

அன்னை தெரேசாவின் தன்னலமற்ற வாழ்க்கையால் கவரப்பட்ட சிறுவன் ஏழைகளுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 'செயிண்ட் ஆஃப் தி குட்டர்ஸ்'  நகரில் அமைக்கப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டிக்காக பணியாற்றுவது என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அப்போது நான் மிகவும் இளமையாக இருந்தேன், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே எனது சொந்த ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் 2009 முதல் உலக மக்கள் சேவை மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் மணிமாறன், சமூகத்தில் ஆதரவற்றவர்களை மீட்டு சிகிச்சை மற்றும் தங்குமிடம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மணிமாறனின் உலக மக்கள் சேவை மையம் இதுவரை 15,000 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களில் பலரை மீட்டு, தொழுநோய் பிரிவுகளில் அனுமதித்துள்ளது.

Manimaran

இதனிடையே மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டிஸில் உள்ள கன்னியாஸ்திரிகளின் அரவணைப்பை நினைவு கூர்ந்த மணிமாறன், அங்கிருந்து நான் திரும்பிச் செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்ததை சகோதரிகள் புரிந்துகொண்டதாகவும், அதனால் அவர்கள் அவரை அருகிலுள்ள ஆண்கள் தங்கும் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும் கூறியள்ளார். அதன்பிறகு நான் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் பணியாற்றினேன், இரவில் ஆண்கள் வீட்டில் தூங்குவேன்.

சிறிது காலம் கழித்து, எனது சொந்த ஊரில் உள்ள மக்களுக்கு சேவை செய்யுமாறு அங்குள்ள நிர்மலா மேடம் என்னிடம் கூறினார்,  "அவரது பரிந்துரையின் அடிப்படையில், கரிகிரியில் உள்ள ஸ்கீஃபெலின் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ரிசர்ச் அண்ட் லெப்ரஸி சென்டரில் பயிற்சி பெற்றேன்" வேலூரில் உள்ள தொழுநோய் மையம் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும், பராமரிப்பாளர் நோயிலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.

சமூக சேவையின் ஆரம்ப நாட்களில், மணிமாறன் வேட்டிகள் மற்றும் புடவைகளுடன் ஒரு பையையும், ஏழைகளுக்கு உதவ முதலுதவி பெட்டியையும் எடுத்துச் செல்வார். அப்போது திருப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது மணிமாறனின் சேவைகளைப் பாராட்டிய கலாம், ஏழைகளுக்காக ஒரு அமைப்பைத் தொடங்கும்படி அவரை வலியுறுத்தினார். அப்போது உருவானது தான் "உலக மக்கள் சேவை மையம்" என்று மணிமாறன் கூறியுள்ளார்.

Manimaran

தாழையாம்பள்ளத்தை பூர்வீகமாக கொண்ட மணிமாறன், மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் மற்றும் விவசாயி தம்பதிகளான பாண்டுரங்கன் மற்றும் ராஜேஸ்வரியின் இளைய பிள்ளை. சிறு வயதிலிருந்தே, பிறருக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம் என்று மணிமாறனின் தந்தை அவரிடம் கூறினார். வேலூரில் பயிற்சி முடித்த மணிமாறன், மைனராக இருந்தபோதும், திருப்பூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தனது சகோதருடன் வேலை பார்த்து வந்தார். ஆனால் "தனக்கு சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதி இல்லை என்பதால், சோதனை நடக்கும் போதெல்லாம் ஓய்வறையில் ஒளிந்து கொள்வேன்" என்று மணிமாறன் கூறுகிறார்.

எட்டு மணி நேரம் வேலை செய்ததற்கு 20 ரூபாய் சம்பளம். "நான் மாதந்தோறும் சம்பாதித்த 600 ரூபாயில், 90 சதவீதத்தை ஆதரவற்றவர்களுக்கு உடைகள் மற்றும் உணவு வாங்குவதற்காக செலவழித்தேன்," அந்த நாட்களில் வீடற்றவர்களைக் கவனிப்பதிலும், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதிலும், அவர்களின் சிகிச்சைச் செலவுகளைக் கவனிப்பதிலும் அதிக நேரத்தைச் செலவழித்தேன்.என் குழந்தை பருவத்திலிருந்தே, என் தந்தை மற்றவர்களுக்கு உதவுவதை நான் பார்த்திருக்கிறேன், அது என்னுள் கொடுக்கும் பழக்கத்தை வளர்த்தது. நான் இதற்கு விதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன்,” என்று புன்னகையுடன் கூறும் மணிமாறன். ஆடைத் தொழிலில் இறங்கி, அதில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

மேலும், உரிமை கோரப்படாத இறந்த உடல்களுக்கு கண்ணியமாக இறுதிச் சடங்குகள் செய்வதில் மணிமாறன் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில், அவரும் அவரது குழு உறுப்பினர்களும் நகரத்தில் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அவர்களுக்கு போலீஸ் துறைகள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து சடலங்கள் தொடர்பாக அழைப்புகள் வருகின்றன.

Manimaran

தொழுநோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடக்கூட மக்கள் அருவருப்பாக உணர்கிறார்கள், ஆனால் நாங்கள் இறந்த உடல்களை உரிமை கொண்டாடுகிறோம், அவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்கு செய்கிறோம். அதிகாரிகளின் ஒப்புதலுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இதுவரை, உரிமை கோரப்படாத 2,558 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளேன், "உண்மையில், நான் மயானத்தில் (புதைக்கப்பட்ட இடத்தில்) நிம்மதியாக உணர்கிறேன், ஏனெனில் மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மையை நான் புரிந்துகொண்டு, அவற்றை இயற்கையான வாழ்க்கைச் சுழற்சியின் அடையாளமாகப் பார்க்கிறேன்.

இந்த எண்ணம் உங்களுக்கு இருந்தால், அது உங்களை அமைதி மற்றும் ஏற்றுக்கொள்ளும் உணர்வுக்கு இட்டுச் செல்லும். கோவிட் தொற்றுநோய் காலம் மாநிலத்தில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு காரணமாக மணிமாறன் எப்போதும் பிஸியாக இருந்துள்ளார். அந்த இரண்டு வருடங்களை என்னால் மறக்கவே முடியாது. இறந்த உடல்களின் அருகில் வர அனைவரும் பயந்தனர். அந்த நாட்களில் நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன், என் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினேன். நான் நல்ல கர்மாவை நம்புகிறேன், இது என்னை இந்த சேவை செய்ய வைத்தது, ”என்று அவர் கூறுகிறார்.

தொற்றுநோய்களின் போது 325 உடல்களின் இறுதிச் சடங்குகளைச் செய்த அவரது சேவையைப் பாராட்டி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகங்களால் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்ட மற்றும் மாநில விருதுகள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதையும் மணிமாறன் பெற்றுள்ளார். அவரது சேவை உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Manimaran

2015 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்வரின் மாநில இளைஞரணி விருதைப் பெற்ற பின்னர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தன்னை ஒரு கூட்டத்திற்கு அழைத்ததாக அவர் குறிப்பிட்டார். பின்னர், மணிமாறனை தேசிய விருதுக்கு ஜெயலலிதா பரிந்துரைத்தார். மணிமாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தபோது அவருக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கினார். தனது எதிர்காலத் திட்டங்களில், இலவச இறுதிச் சடங்குகளை வழங்கும் மின்சார சுடுகாட்டைக் கட்ட விரும்புவதாக மணிமாறன் கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment