Advertisment

சன் டி.வி-யில் புதிய த்ரில்லர் சீரியல் அனாமிகா: யார், யார் நடிக்கிறாங்க?

சன்டிவியில் த்ரில்லர் சீரியல்கள் ஒளிபரப்பாகி சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு த்ரில்லர் சீரியல் வர உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anamika Serial

சன் டிவி புதிய சீரியல் அனாமினா

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் முக்கிய இடம் பிடித்துள்ள சன் டிவியில் அனாமிகா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு த்ரில்லர் தொடர் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ள வருகிறது. தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது அடுத்து வரும் புதிய சீரியல் குறித்து அறிவிப்பு வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் சன்டிவியின் அன்பே வா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அனாமிகா என்ற புதிய சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. நடிகை அக்ஷதா தேஷ்பாண்டே இந்த புதிய தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் என்டரி ஆகிறார். ஏற்கனவே  எதிர்நீச்சல், சுந்தரி மற்றும் கயல் உள்ளிட்ட சீரியல்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதுவரவான அனாமிகாவுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் சன்டிவியில் த்ரில்லர் சீரியல்கள் ஒளிபரப்பாகி சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு த்ரில்லர் சீரியல் வர உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தர்ஷக் மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த சீரியல் எப்போது வெளியாகும், இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விபரங்கள் தொடர்பான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மாடலிங் துறையில் பிரபலமான அக்ஷதா தேஷ்பாண்டே ரக்ஷித்துடன் இணைந்து நடித்த மாதே வசந்தா சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காவ்யாஞ்சலி என்ற கன்னட சீரியலில் தீபா ஜெகதீஷுக்கு பதிலாக அவர் நடித்துள்ளார். தற்போது அனாமிகா சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், சீரியல் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment