Advertisment

பூங்குழலியாக மாறிய நியூஸ் ரீடர் லாவண்யா: வைரல் போட்டோஸ்

மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்கியுள்ள அவரின் கனவுப்படம் பொன்னியின் செல்வன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூங்குழலியாக மாறிய நியூஸ் ரீடர் லாவண்யா: வைரல் போட்டோஸ்

பொன்னியின் செல்வன் பூங்குழலி கெட்டப்பிற்கு மாறிய பிரபல செய்தி வாசிப்பாளரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்கியுள்ள அவரின் கனவுப்படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்.30 ந் தேதி வெளியானது.

விக்ரம், த்ரிஷா, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் கார்த்தி சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்தீபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போதுவரை 400 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனின் காதலி பூங்குழலி என்ற கேரக்டரில் படகு ஓட்டும் பெண்ணாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனிடையே தற்போது ஐஸ்வர்யா லட்சுமியின் கெட்டப்பில் பிரபல செய்திவாசிப்பாளரான லாவண்யா ஸ்ரீராம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

. “வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் அலை அடிப்பதுமேன்?” என்ற வரிகளுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment