‘மிர்ச்சி சிவா’ நடிப்பில் ‘தமிழ்ப்படம் 2’ பூஜை புகைப்படங்கள்

‘தமிழ்ப்படம்’ பார்ட் 2 எடுக்கப் போகிறார் சி.எஸ்.அமுதன். ‘மிர்ச்சி’ சிவாவே ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாகவும், திஷா பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்க காமெடிப்படமாக அமைந்த இதுதான், சி.எஸ்.அமுதனுக்கு முதல் படம். எனவே, அவருடைய அடுத்த படத்துக்கு ‘ரெண்டாவது படம்’ என்றே வித்தியாசமாக தலைப்பு வைத்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி, சஞ்சனா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், பல வருடங்களாகியும் இன்னும் இந்தப் படம் ரிலீஸாகவில்லை.

எனவே, ‘தமிழ்ப்படம்’ பார்ட் 2 எடுக்கப் போகிறார் சி.எஸ்.அமுதன். ‘மிர்ச்சி’ சிவாவே ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

×Close
×Close