Advertisment

விஜய் டி.வி-யில் இன்னொரு நிஜ காதல் ஜோடி: பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா பதிவை பாருங்க!

ரீமேக் செய்யப்பட்ட மொழிகளில் முடிந்துவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Deepika Saravana Vikram

வி.ஜே. தீபிகா - சரவண விக்ரம்

சமீப காலமாக சின்னத்திரையில் நடித்து வரும் ஜோடிகள் ரியல் லைஃபில் இணைந்து வருவது தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி இணைந்துள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோரத்துவம், கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல தேவைகளை வலியுறுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

ரீமேக் செய்யப்பட்ட மொழிகளில் முடிந்துவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் கூறுகின்றன.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவண விக்ரம், அவரது மனைவி ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் விஜே தீபிகா இருவரும் ரியல் லைஃபில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த விஜே தீபிகா முகத்தில் பரு காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரீ-என்டரி கொடுத்தார். சீரியலில் நடிக்கும்போது நெருக்கம் காட்டி வந்த சரவண விக்ரம் – விஜே.தீபிகா இருவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமாகினர். இதனை வைத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

ஆனால் இது குறித்து இவர்கள் இருவருமே மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது இருவரும் வாழ்க்கையில் இணைய உள்ளதாக தங்களது சமூகவலைத பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தொடக்கத்தில் நட்பு மாதிரியான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்த இவர்கள் தற்போது கப்பில்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளில் வரும் கேப்டஷன்களும் லவ்வர்ஸ் குறிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே சரவண விக்ரமுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள வி.ஜே.தீபிகா இப்போது மட்டுமல்லா இனி வரும் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்தே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவி சீரியல்களில் நடித்த பல ஜோடிகள் ரியல் லைஃபில் இணைந்துள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது சரவண விக்ரம் விஜே தீபிகா இணைய உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Vj Deepika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment