குக் வித் கோமாளி பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்… யாருனு கண்டுபிடிங்க பார்ப்போம்…

Tamil Reality Show : விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, சன்டிவியின் அசத்தப்போலது யாரு ஞாயிறு கலாட்டா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றவர் மதுரை முத்து

Tamil Comedian Madurai Muthu Childhood Photo : சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை ரசிகர்களுக்கு ஏற்றபடி வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருவது அனைவரும்அறிந்த ஒன்று. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும் ஒரு சில நிகழ்ச்சிகள் நிறைவடைந்துவிட்டாலும், அந்த நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் பல மாதங்கள் நிலைத்திருக்கும்.

அந்த வகையில் விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இந்த 2 சீசன்களுக்குமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வைரலாக சென்றுகொண்டுதான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் 3-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.  

இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக நடிகை ஷகீலா நடிகை தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், அஸ்வின் கனி உள்ளிட்டோருடன் பல புதுமுகங்கள் கலந்துகொண்டு பிரபலமடைந்துள்ளனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சிவாங்கி புகழ் பாலா ஆகியோர் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ காலிங் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் கனி முதலிடத்தையும், ஷகீலா 2-வது இடத்தையும் அஸ்வின் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளுக்கு இணையாக காமெடியில் அசத்திய மதுரை முத்து ஒரு சில வாரங்களில் வெளியேறிவிட்டார். அதன்பிறகு ஸ்பெஷல் கோமாளியாக என்ட்ரி கொடுத்த அவர் கடி ஜோக் சொல்லி அனைவரையும் கலகலப்பாக்கினார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, சன்டிவியின் அசத்தப்போலது யாரு ஞாயிறு கலாட்டா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற மதுரை முத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளார். மேலும் அகிலன் மற்றும் மதுரை வீரன் என்ற இரு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மதுரை முத்து தற்போது தனது பள்ளிப்பருவத்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality cook with comali celebrity madurai muthu childhood photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express