Tamil Reality Show Cook With Comali Show : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தான் அழைத்து வந்த இளைஞர் யார் என்பது குறித்து, பவித்ரா லட்சுமி விளக்கமளித்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமையலும் காமெடி ரகளையும் இணைந்த இந்த நிகழ்ச்சி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையானதாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்று வரும் நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில், வெற்றி பெற்ற, அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற நிலையில், வைல்ட் கார்டு ரவுண்டில் ஷாகிலா மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும், இறுதிப் போட்டியில் நுழைந்தனர். தொடர்ந்து இந்த வாரம் இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை விரைவில் முடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வரும் வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ‘ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி’ ரவுண்ட் நடைப்பெறுகிறது.
இதில் போட்டியாளர்கள் அனைவரும், தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டுள்ளனர். அதில் பவித்ரா லட்சுமி ஒரு இளைஞருடன் கலந்துக் கொண்ட ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருடன் கலந்துகொண்ட அந்த நபர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது இந்த சந்தேகத்திற்கு பவித்ரா விடையளித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”குக் வித் கோமாளியில் “நண்பர்கள் மற்றும் குடும்ப சுற்று" இது. துரதிர்ஷ்டவசமாக என் குடும்பம் சென்னையில் இல்லை, எனக்கு ஆதரவளித்து, என்னை ஆதரித்தவர் யார் என்று பாருங்கள்! சுதர்ஷன் கோவிந்த் நன்றி மா, என்னுடைய ஃபேவரிட் அகில உலக சூப்பர் ஸ்டார். சமைக்க தெரிஞ்ச ஒரே ஃப்ரெண்ட் நீங்க தான். எல்லோருக்கும் உங்களைப் போன்ற ஒரு நண்பர் தேவை” என குக் வித் கோமாளி செட்டில் எடுத்துக் கொண்ட படங்களுடன் இதனைப் பதிவிட்டிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil