Advertisment

எளிய முறையில் திருமணம்... மாலத்தீவில் ஹனிமூன் : சர்வைவர் போட்டியாளர் ரீசன்ட் க்ளிக்ஸ்

ஜிம் ட்ரெய்னராக ஐஸ்வர்யா கிருஷ்ணன், நடிப்பு மற்றும் மாடலிங்கில் உள்ள ஆர்வத்தின் காரணமாக இன்ஸ்டாகிராமில், வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

author-image
WebDesk
New Update
Aishwarya Krishnan

சர்வைவர் போட்டியாளர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்

சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவருடன் மாலத்தீவு ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு போட்டியாக ஜீ தமிழில் தொடங்கப்பட்டது தான் சர்வைவர். நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில், விஜே பார்வதி, உமாபதி ராமையா, விஜயலட்சுமி, இந்திரஜா ஷங்கர், நந்தா, சிருஷ்டிகா டங்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். ஜிம் ட்ரெய்னராக ஐஸ்வர்யா கிருஷ்ணன், நடிப்பு மற்றும் மாடலிங்கில் உள்ள ஆர்வத்தின் காரணமாக இன்ஸ்டாகிராமில், வீடியோக்கள் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் காரணமாக அவருக்கு ரியாலிட்டி ஷோக்களிலும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சில மாதங்களுக்கு மன்பு ஐஸ்வர்ய தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணமும் முடிந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யா கிருஷ்ணன் மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூன் கொண்டடி வருகிறார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment