Advertisment

காவி உடை; கழுத்துல உத்ராட்ச கொட்டை; பாக்கியலட்சுமி சீரியல் கோபியை அடையாளம் தெரியுதா?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்காவே இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gopi Sathish

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ்-க்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் ஒருவாகியுள்ள நிலையில், காவி உடையுடன் இவர் நடித்த சீரியலின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாக்யா கோபி ராதிகா இந்த 3 கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் மோதலை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்காவே இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். பாக்யா – ராதிகா இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு வழிக்கும் இவர் மனதிற்கும் பேசிக்கொள்வது போல் புலம்பும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இவருக்கானவே பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் ஜிம்மில் இருந்தபடி தத்துவ வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார்.அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறார்.

இதனிடையே ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் இவர் சாமியார் வேடத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டு நடிகர் சதீஷ் கோபி மட்டும் இல்ல நான் இப்படியும் நடிச்சிருக்கேன் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் நீங்க ஆல் ரவுண்டர் சார் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment