/indian-express-tamil/media/media_files/2025/10/18/simbu-actress-2025-10-18-08-48-25.jpg)
ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்வதாக அவரது அப்பாவிடமே சொன்ன நடிகை சாந்தினி பிரகாஷ், சிம்பு தன்னிடம் நேரடியாக ஐ லவ்யூ சொன்னதாகவும், அதன்பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து பேசியுள்ளனர்.
சின்னத்திரையில் பூவே பூச்சூடவா சீரியல் மூலம், பிரபலமான நடிகை சாந்தினி பிரகாஷ் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், விஜய் டிவி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது, அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியலாக பலரின் மனதை வென்றது.
இந்த சீரியல் முடிந்த உடனே அடுத்த வாரமே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பானது. இதில், நடிகை நிரோஷா பாண்டியன் கேரக்டரின் மனைவி கோமதி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், முதல் சீசனில் நடித்த வெங்கட், ஹேமா ராஜ்குமார், ஸ்டாலின் முத்து ஆகியோர் மட்டும் 2-வது சீசனில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்த சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் வில்லியா? நல்லவரா என்ற குழப்பத்தை ஏற்படும் கேரக்டராக வருபவர் தான் சாந்தினி பிரகாஷ்.
இதனிடையே ரியாலிட்டி ஷோவில் சிம்புவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியபோது டி.ஆர்,சொன்ன பதில் மற்றும் சிம்புவை நேரில் சந்தித்த அனுபவம் குறித்து சாந்தினி பேசியுள்ளார். நான் 'தக் லைஃப்' திரைப்படத்தின் விழாவில் இருந்தபோது அந்த நிகழ்ச்சியில் சிம்புவுக்கு அனைவரும் 'ஐ லவ் யூ' சொன்னார்கள். அதன்பிறகு நான் தனியாக சென்று சிம்பு சார், 'ஐ லவ் யூ' என்று சொன்னேன். அவர் மேடையில் இருந்து எனக்கு இரண்டு விரல்களில் ஹாட்டின் போல வைத்து 'ஐ லவ் யூ டூ' என்று சொன்னார். அது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், "நான் அவருடைய மனைவியாகக் கனவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஒருவரைப் பிடித்திருக்கிறது, காதல் இருக்கிறது என்றால், அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று இல்லையே. நமக்கு பிடித்தவங்க கூட நாம் மனசார வாழ்ந்தாலே போதும். அந்த வாழ்க்கைதான் நான் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us