Advertisment

முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா 2... மீண்டும் ஜீ தமிழுக்கு பறந்த வெண்பா : சீரியலா? நிகழ்ச்சியா?

ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ஃபரீனா அபி டெய்லர் என்ற சீரியலிலும் நடித்து வந்தார்.

author-image
WebDesk
New Update
Farina Azad

ஃபரீனா ஆசாத்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் நாளையுடன் (ஆகஸ்ட் 6) முடிவடைய உள்ள நிலையில், இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை ஃபரீனா ஆசாத் ஜீ தமிழில் டிவிக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேரி வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. மலையாளத்தில் வெளியான கருத்த முத்து என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த சீரியலில் விணுஷா தேவி, அருண் பிரசாத், ரூபாஸ்ரீ ஃபாரீனா ஆகியோர் முக்கிய கேரக்டரில நடித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 என்ற பெயரில் இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பானது. இதில் நாயகியாக விணுஷா தேவியே நடித்து வரும் நிலையில், நாயகனாக ரோஜா சீரியல் நாயகன் சுப்பு சூரியன் பாரதி கேரக்டரில் நடித்தார். அவரது அம்மாவாக ரூபாஸ்ரீயும், வில்லியாக ஃபரீனா ஆசாத்தும் நடத்து வந்தனர். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்த நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் புள்ளிகள் குறைந்தது.

இதனால் திடீரென பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை (ஆகஸ்ட் 6) தொடர்ந்து 3 மணி நேரம் இறுதி அதிதியாயம் ஒளிபரப்பாக உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ஃபரீனா ஆசாத், அடுத்து ஜீ தமிழில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ஃபரீனா அபி டெய்லர் என்ற சீரியலிலும் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற நிகழ்ச்சியை நடிகை ஃபரீனா மற்றும் ஆர்ஜே விஜய் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment