Advertisment

மேக்கப் இல்லாமல் மக்களோடு கலந்து ஊர் சுற்றும் விஜய் டி.வி நடிகை: யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஹிட்லர் கெரி பெல்லம் என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தார். ஜீ தெலுங்கில் வெளியான இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gomathi Priya

சீரியல் நடிகை கோமதி பிரியா

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கோமதி பிரியா. தற்போது இவர் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

பிரியா பாலக்குமாரன் என்று அறியப்பட்ட கோமதி பிரியா விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

publive-image

அதற்கு முன்பே ஹிட்லர் கெரி பெல்லம் என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தார். ஜீ தெலுங்கில் வெளியான இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ந்தது.

publive-image

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

வெற்றி வசந்த நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் மீனா – முத்து இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணயில் உள்ளது.

publive-image

வெளியில் செல்லும்போது கோமதி பிரியா மேக்கப் இல்லாமல் மக்களோடு மக்களாக வெளியில் சுற்றி வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் தங்களில் ஒருவராக பார்க்கின்றனர்.

publive-image

இதில் சமீபத்தில் திருச்சந்தூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்த கோமதி பிரியா தற்போது கடலூர் சிதம்பரம் பகுதியில் உள்ள மங்கிரோவ் காடுகளை சுற்றிப்பார்க்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment