Advertisment

மீனா வளைகாப்பு 8 நாள்; தனம் 5 நாள்; முல்லை 3 நாள்; ஐஸ் ஒரே நாள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீக்ரெட்ஸ்

தற்போது கண்ணன் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், தனம் கேன்சர் பிரச்சனை தற்போது மீனாவை தாண்டி முல்லைக்கு தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Pandian Stores

பாண்யன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். இன்றைய மக்களுக்கு தேவையான ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் 4 சகோதரர்களுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் முக்கிய கதையாக உள்ளது. இதில் கடந்த சில தினங்களாக கண்ணன் லஞ்சம் வழக்கு, தனம் கேன்சர் பிரச்சனை சார்ந்தே கதை நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதில் தற்போது கண்ணன் ஜாமீனில் வெளி வந்துள்ள நிலையில், தனம் கேன்சர் பிரச்சனை தற்போது மீனாவை தாண்டி முல்லைக்கு தெரியவந்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யாவின் வளைகாப்பு ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் பேசும் மீனா, நான் ஒரு மீம் பார்த்தேன். கண்ணன் கல்யாணம் பண்ணும்போது அம்மா செத்துப்போய்ட்டாங்க. மனைவிக்கு வளைகாப்பு வைக்கும்போது அண்ணன் ஜெயிலுக்கு போய்ட்டார். குழந்தை பிறகும்போது இவனே ஜெயிலுக்கு போய்ட்டா என்ன பையன் இவன் என்று சொல்லிவிருந்தார்கள். இப்போது அவர்களின் வளைகாப்பு ஷூட்டிங் நடக்க உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்தம் 4 மருமகள்கள். இதில் முதலில் கர்ப்பமான மீனாவின் வளைகாப்பு ஷூட் மட்டும் 8 நாட்கள் எடுத்தார்கள். அடுத்து மூத்த மருமகள் தனம் வளைகாப்பு 5 நாட்கள் எடுத்தார்கள். அடுத்தாக 3-வது மருமகள் முல்லை வளைகாப்பு ஷூட் 3 நாட்கள் எடுத்தார்கள். இறுதியாக இப்போது ஐஸ்வர்யாவின் வளைகாப்பு ஒரு நாளில் ஷூட் பண்ணி முடிக்க வேண்டும் என்று பரபரப்பாக வேலை செய்தார்கள் என்று கூறியள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment